மதுரை டி.வி.எஸ் நகர் கோவலன் பேட்டை பாலத்தில் சொகுசுகார் ஒன்று சந்தேகிக்கும் விதமாக வந்துள்ளது. காவல் துறையினரைப் பார்த்ததும் டிரைவர் காரை வேகமாகத் திருப்ப முயன்றுள்ளார்.
இதனால் சந்தேக மடைந்த காவல் துறையினர். அந்தக் காரை மடக்கிப் பிடித்தனர். அப்போது, ஆய்வு செய்ததில் 5 கிலோ கஞ்சாவும் 7,000 பணமும் நீண்ட கத்தியும் இருந்துள்ளது.
காரில் இருந்த இரண்டு பேரிடம் விசாரித்த போது நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த சுந்தர் (40), மதுரை ஜெய்ந்து புரத்தைச் சேர்ந்த சுடலை முத்து என்பது தெரிய வந்தது.
இவர்கள் சொகுசு கார்களில் சென்று கஞ்சா வியாபாரம் செய்யும் நபர்கள் எனவும் தகவல் கிடைத் துள்ளது.
காரில் வந்த நபர்களுக்கு கஞ்சா எவ்வாறு கிடைக்கிறது. அவர்கள் இவ்வாறு மட்டும்தான் கஞ்சா வியாபாரம் செய்கிறார்களா.
வேறு எதுவும் யுக்தி உள்ளதா. இவர்களுக்கு கூட்டாளிகள் உள்ளனரா என்ற கோணத்தில் சுப்புர மணியபுரம் காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Thanks for Your Comments