ஒரு பொண்ணா எனக்கு எல்லா உணர்ச்சிகளும்... மைனா நந்தினி !

0
'மைனா' நந்தினியை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. கணவரின் தற்கொலைக்குப் பின்னர், நந்தினி பற்றி பல எதிர் மறையான கருத்துகள் துரத்தின. 
ஒரு பொண்ணா எனக்கு எல்லா உணர்ச்சிகளும்... மைனா நந்தினி !
அவற்றை யெல்லாம் சவாலுடன் எதிர் கொண்டு, தற்போது மீடியா துறையில் பிஸியாக இருக்கிறார். அவருடன் பர்சனல் சாட்!

மீடியாவில் நீங்க பார்க்கும் நந்தினிக்கும் நேரில் பார்க்கும் நந்தினி க்கும் நிறைய வித்தியாசம் இருக்குங்க. என்னைப் பற்றி நானே சொல்லக் கூடாது. 

இருந்தாலும் கேட்டுட்டீங் களேனு சொல்றேன் என அவருக்கேயான லந்தோடு பேசத் தொடங்கினார். சின்ன வயசிருந்தே நான் பொறுப்பான பொண்ணு. 

என் அம்மாவும் அப்பாவும் கஷ்டப் படுறதைப் புரிஞ்சுக்கிட்டு இது வேணும், அது வேணும்னு அடம்பிடிச்சதே இல்லை. என்னால் முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு சப்போர்ட்டா இருக்க நினைச்சேன். 

எங்க வீடு ரொம்பவே சின்னது. டிவிகூட கிடையாது. அந்த அளவுக்கு ஏழ்மையான குடும்பம். என் குடும்பத்தை பெரிய லெவலுக்குக் கொண்டு வர்றது என் கனவா இருந்துச்சு. 
காலேஜ் படிக்கும் போதே டைப்ரைட்டர் வேலைக்குப் போனேன். ஆர்ஜே, வீஜேனு நான் பார்க்காத வேலையே கிடையாது. அந்த அளவுக்கு உழைச்சேன். 

இப்போ என் முகம் வெளியில் தெரியுதுன்னா, அதுக்குப் பின்னாடி கடின உழைப்பும் என் பெற்றோர் கொடுத்த தன்னம் பிக்கையும் இருக்கு என்றவரின் பேச்சில் அத்தனை கம்பீரம்.

என் குடும்பத்துக்கே நகைச்சுவை உணர்வு அதிகம். ஏதாச்சும் சீரியஸா பேசிட்டிருக்கும் போது, அம்மா அசால்டா கலாய்ச் சுட்டுப் போயிடுவாங்க. 

வெளியில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் வீட்டுக்குள்ளே நுழைஞ்சுட்டா, எல்லாம் மறந்துடும். அது, எனக்குள் நகைச்சுவை உணர்வை அதிகம் கொடுத்துச்சு. 

மதுரைக் காரங்களுக்கு லந்து இல்லாமல் இருக்குமா? எவ்வளவு தான் மத்தவங் களைக் கலாய்ச் சாலும், அவங்க மனசு புண்படாமல் கவனமா இருப்பேன். 

அதனால் தான், ஜீ தமிழின் 'காமெடி கில்லாடிஸ்' நிகழ்ச்சியில் நடுவரா உட்கார்ந் திருக்கேன். 
காமெடி கில்லாடிஸில் கலந்து கொண்ட எல்லோருமே அவங்களுக் கான தனி அடையா ளத்தை உருவாக்கப் போராடு றவங்க. 

என்னால் முடிஞ்ச அளவு அவங்களை உற்சாகப் படுத்துறேன். அந்த செட்டில் டபுள் மீனிங் ஜோக்ஸையும் தவிர்க்கச் சொல்லி அட்வைஸ் பண்றோம்.

என் கணவர் இறந்ததும் எல்லோரும் என்னைக் கடுமையா விமர்சனம் செஞ்சாங்க. நானும் பொண்ணு தாங்க. 

எனக்கும் எல்லா உணர்ச்சி களும் இருக்கு. எனக்கும் குடும்பம் முக்கியம். என் அம்மா, அப்பா, தம்பி மூணு பேருமே எனக்குக் குழந்தைகள் மாதிரி. அவங்களுக் காக நான் இங்கே இருந்து தான் ஆகணும். 

ஒரு பொண்ணா எனக்கு எல்லா உணர்ச்சிகளும்... மைனா நந்தினி !
சிரிக்கிறது, டான்ஸ் ஆடுறது, பாட்டுப் பாடறது என்னுடைய வேலை. அதை நான் செஞ்சுதான் ஆகணும். 

விமர்சனம் பண்றவங் களால் என்னைப் புரிஞ்சுக்க முடியாது. ஒவ்வொருத் தருக்கும் தனித்தனியா புரிய வெச்சுட்டு இருக்கும் அவசியமும் எனக்கு இல்லை.

நான் நானாக இருக்கேன். ஸ்கூல், காலேஜ் படிக்கும் போது எப்படி இருந்தேனோ அப்படியே இருக்கேன். 

அதனால தான் எல்லோரையும் ஈஸியா நம்பி ஏமாந்துடறேன். இந்த ஒரு வருஷத்தில் நிறைய கத்துக் கிட்டேன். 

அழறது ஒண்ணும் கேவலம் கிடையாது. அழுகையின் மூலமா ஒரு அமைதியையும் தெளிவையும் உணர முடியும். நீலி சீரியலில் நடிக்கும் போதெல்லாம் நான் கிளிசரின் பயன் படுத்தவே இல்லை. 
இன்னும் நிறைய ஹார்டு ஒர்க் பண்ணி என் ஃபேமிலியை பார்த்துப்பேன். எந்தப் பிரச்னை வந்தாலும் எனக்கு சப்போர்ட்டா இருக்கும் என் நண்பர் களுக்கு நன்றி என அழுத்த மான குரலில் சொல்கிறார் மைனா நந்தினி.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings