1809-ல் பிரெஞ்சுக் காரர்கள் போர்க்களத்தில் காயமடைந்த போர் வீரர்களைக் குணப்படுத்த மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர்.
நடக்க முடிந்தவர்கள் அல்லது ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லக் கூடியவர் களைப் போர்க் களத்துக்கு அருகிலேயே ஒரு கூடாரம் அமைத்து உடனடியாகச் சிகிச்சை அளித்தனர்.
பிரெஞ்சு மொழியில், நடப்பது என்பதற்கான சொல் `ஆம்புலேர்’ (Ambulare). 1242-ல், `உதவி வேண்டு வோருக்கான புகலிடம்’ என்ற பொருளில் `ஹாஸ்பிடல்’ என்ற சொல் வழங்கி வந்தது.
`ஆம்புலன்ஸ்’ என்பதற் கான நேரடி மொழிபெயர்ப்பு - `உதவி வேண்டுவோர் நடந்தோ, சுமக்கப் பட்டோ சென்றடையும் இடம்’ என்பதாகும்.
19-ம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் கிரிமியாவில் நடைபெற்ற போரில் குதிரை களால் இழுக்கப் பட்ட வாகனங் களில்,
காய மடைந்த போர் வீரர்களை முதல் முறையாக மருத்துவ மனைகளுக்கு எடுத்துச் சென்றனர்.
அந்த வாகனங்கள் `ஆம்புலன்ஸ்’ என்று அழைக்கப்பட்டன.
கிரிக்கெட்டில் 'Wagon Wheel' பற்றி தெரியுமா?
1600- 1613-ம் ஆண்டுகளில் கனடாவின் அகேடியாவில் போர்டு ராயல் துறை முகத்தில் சிக் பே (sick bay) என்ற முதல் மருத்துவமனை ஏற்படுத்தப் பட்டது.
செயின்ட் ஜூன் டீ டீயு ஆர்டரை சேர்ந்த இருவர் அதை நடத்தி வந்தனர்.