விவசாயி சாவுக்கு நானே காரணம்.... தற்கொலை செய்து கொண்ட இளைஞர் !

0
ஒத்தக்கடையில் சில மாதங்களாக அதிக விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் சிந்தாமணி பழனியப்பா நகரைச் சேர்ந்த மாரிசெல்வம் (20) வயது இளைஞர் ஒத்தக்கடை சாலையில் காரில் வந்துள்ளார். 
விவசாயி சாவுக்கு நானே காரணம்.... தற்கொலை செய்து கொண்ட இளைஞர் !
அப்போது எதிர்பாராத விதமாக விவசாயி சேகர் படுகாய மடைந்து இறந்தார். அதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தன் தந்தையிடம் பேசியுள்ள மாரிசெல்வம், 'ஒரு விவசாயி சாவுக்கு ஆளாகி விட்டேன்' என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இந்நிலையில், மனம் உடைந்த மாரிசெல்வம் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இந்தச் சம்பவம் பரபரப் பானது. இது தொடர்பாக அவனியாபுரம் காவல்துறை வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரித்து வருகிறது .
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings