நெல்லையில், தனியார் காப்பகத்தில் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்த சிறுவன், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை புறநகர்ப் பகுதியான ராமையன் பட்டியில் 'யூசிபியா சமூக சேவை நிறுவனம்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழை, எளிய, ஆதரவற்ற சிறுவர் களுக்கான காப்பகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
இங்கு தங்கியுள்ள சிறுவர்கள், அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தக் காப்பகத்தில், மதுரை ஜீவாநகர் வள்ளலார் தெருவைச் சேர்ந்த ஜாபர் என்பவரின் மகன் முகம்மது யூனுஸ் என்ற 7 வயது சிறுவனும் தங்கியிருந்து படித்து வந்தான்.
ஆட்டோ ஓட்டுநரான ஜாபரும் அவரது மனைவி ஜன்னத் பேகமும் குடும்பச் சூழ்நிலை காரணமாக தனித் தனியே வசித்து வருகின்றனர். அதனால், முகம்மது யூனுஸை இந்தக் காப்பக த்தில் சேர்த்துப் படிக்க வைத்தனர்.
மாதத்துக்கு ஒரு முறை ஜன்னத் பேகம் நெல்லைக்கு வந்து மகனைப் பார்த்துச் செல்வதுடன், அவனுக்குத் தேவையான பொருள் களையும் வாங்கிக் கொடுப்பது வழக்கம்.
பெற்றோர் அதிர்ச்சி
அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்துவந்த முகம்மது யூனுஸ், திடீரென மயங்கிச் சரிந்து ள்ளான். இதனால் பதற்றம் அடைந்த காப்பக நிர்வாகிகள், உடனடி யாக அவனை அரசு மருத்துவ மனைக்குத் தூக்கிச் சென்றனர்.
ஆனால், வழியிலேயே பரிதாபமாக உயிரி ழந்தான். இந்தச் சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு இருக்கக் கூடுமோ என்கிற சந்தேகம் எழுந்தது.
இதை யடுத்து, சுகாதாரத் துறையினர் அந்தக் காப்பகத்தில் ஆய்வு செய்ததுடன், சுகாதாரப் பணிகளையும் மேற் கொண்டனர்.
Thanks for Your Comments