ஆபரேஷன் தியேட்டரில் மின்தடை... டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை !

0
ஆந்திர மாநிலம் குண்டூரில் அமைந்துள்ள அரசு மருத்துவ மனையில், நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த சமயத்தில் 
ஆபரேஷன் தியேட்டரில் மின்தடை... டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை !
திடீனெ மின்தடை ஏற்பட்டதால், மருத்துவர்கள் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த அரசு மருத்து மனையில் மொத்தம் 10 ஆபரேஷன் தியேட்டர்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சமீபத்தில் தான் புதுப்பிக்கப் பட்டது. 

அந்தத் தியேட்டரில் மின்தடை ஏற்பட்டாலும், வெளிச்சத்தைக் கொடுக்கும் 4 எல்.இ.டி விளக்குகள் பொருத்தப் பட்டன. ஆனால், அவற்றில் ஒன்று தான் இப்போது செயல்படும் நிலையில் உள்ளது. 

இது பற்றி மருத்து வர்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால், அதை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. 

இதனால், மருத்துவர்கள் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விட்டது. புதன்கிழமை இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
அந்த எல்.இ.டி விளக்குகளை மாற்ற ரூ.5 லட்சம் ஆகும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. அதற்கான முயற்சிகள் எதுவும் இல்லை. 

ஆனால், அந்த மருத்துவ மனையில் ரூ.65 கோடியில் தாய் மற்றும் சேய் நலப்பிரிவு அமைக்க ஆந்திர அரசு ஆணை பிறப்பித் துள்ளது. 

செல்போன் டார்ச் வெளிச்ச த்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற் கொள்ளும் புகைப்படம் சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

இது பற்றி மருத்துவ மனை நிர்வாகம் தரப்பில் கேட்ட போது, மின் தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் மூலம் தடையை நீக்கும் வசதி மருத்துவ மனையில் இருக்கிறது. 

ஆனால், ஜெனரேட்டரை ஆன் செய்து மின்சாரத்தைக் கொண்டு வர 5 நிமிடங்கள் வரை காலதாமதம் ஆகும். 

இந்தக் கால தாமதத்தைத் தவிர்க்கவே மருத்துவர்கள் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்துள்ளனர் என்று விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.
குண்டூர் அரசு மருத்து மனையில் தான் ஆந்திராவிலேயே முதல் இதயம் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. 

ஆந்திர சுகாதாரத் துறை அமைச்சர் கமினேனி ஸ்ரீனிவாஸு க்கு இந்த மருத்துவ மனையில் தான் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings