ரகசிய கூட்டம் - இன் காமிரா என்பது என்ன?

பொதுவாக, ரகசியமாக நடக்கும் கூட்டத்தை ஏன் `இன் காமிரா’ என்று குறிப்பிடு கிறோம்?

ரகசிய கூட்டம் - இன் காமிரா என்பது என்ன?
லத்தீன் மொழிச் சொல்லான `காமிரா’ என்பதற்கு அறை என்று பொருள். மூடப்பட்ட இடம் 
அல்லது மேலே உள்ள அறை என்பதைக் குறிக்கும் பொருளில் இது 19-ம் நூற்றாண்டு வரை வழக்க த்தில் இருந்தது.

பிற்பாடு தான், `புகைப்படம் எடுக்கும் கருவி’ என்ற அர்த்த த்தில் `காமிரா’ பயன் படுத்தப் பட்டது. உண்மை யில், 

in camera என்பதற்கு நீதிபதி யின் பாதுகாக்கப் பட்ட அந்தரங்க மான அறை என்பது சரியான விளக்கம்.
புகைப்படக் கருவி ஆரம்பத் தில் `இருட்டறை’ என்ற பொருளில் camera obscura’ என்று அழைக்கப் பட்டது. 
பின்னர், ஒளிபுகும் அறை என்ற பொருளில் `camera lucida’ என்று அழைக்கப் பட்டது. 

1840-ல் தற்கால புகைப்படக் கருவி அறிமுக மான பிறகு அது சுருக்கப் பட்டு `காமிரா’ (camera) என்று வழங்கப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings