இம்மாதம் 15ம் தேதி துவங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மீண்டும் களமிறங்குவதாக
கூறியிருந்த நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், போட்டியில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ளார்.
23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அமெரிக்கா வின் செரீனா வில்லியம்ஸ், கடந்தாண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பட்டம் வென்றார்.
அந்தப் போட்டியின் போது கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். செப்டம்பரில் பெண் குழந்தைக்கு தாயான பிறகு,
தனது காதலரும், ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான அலெக்சிஸ் ஓகானியானை திருமணம் செய்தார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில், மற்றொரு வெற்றியைப் பெற்று, மார்க்கரெட் கோர்ட்டின் 24 கிராண்ட் ஸ்லாம் வெற்றி சாதனையை சமன் செய்வதற்கு செரீனா தீவிரமாக இருந்தார்.
தான் கர்ப்ப மடைந்தது உறுதி செய்து ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் அந்த சாதனையைப் புரிய வேண்டும் என்று நினைத் திருந்தார் வரும்,
15ம் தேதி ஆஸ்திரேலிய ஓபன் துவங்க உள்ள நிலையில், அதற்கு முன்னோட்ட மாக துபாயில் நடந்த முபாடலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் பங்கேற்றார்.
ஆனால் முழு உடல்தகுதி பெறாததால் அந்தப் போட்டியில் தோல்வி யடைந்தார்.
இந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் இருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நினைவு களோடு இந்தப் போட்டியில் இருந்து விலகு கிறேன். விரைவில் முழு வேகத்தோடு களம் இறங்குவேன் என்று அவர் கூறியுள்ளார்.
Thanks for Your Comments