ஸ்பெயினின் வருங்கால அரசி.... அறிவித்த மன்னர் !

0
ஸ்பெயினின் இளவரசி யாக மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் 12 வயது மகள் அறிவிக்கப் பட்டுள்ளார். இவர் தான் ஸ்பெயினின் வருங்கால அரசியாவார்.
ஸ்பெயினின் வருங்கால அரசி.... அறிவித்த மன்னர் !
ஸ்பெயினின் மன்னராக ஆறாம் ஃபிலிப் உள்ளார். இவரது 12 வயது மகள் லியோனார்.

இளவரசியாக அறிவிப்பு மாட்ரிட் நகரில் உள்ள ராயல் பேலஸில் நடந்த இந்நிகழ்ச்சியில் மன்னர் ஆறாம் ஃபிலிப் தனது மகள் லியோனாரை இளவரசியாக அறிவித்துள்ளார்.

ஆட்சி செய்யும் ராணியாக..

இளவரசியாக அறிவிக்கப்படுவது அரச குடும்பத்தில் மிகப்பெரிய கவுரவமாகும். 

இளவரசியாக அறிவிக்கப் பட்ட இந்த 12 வயது சிறுமி லியோனார் வரும் காலத்தில் நாட்டையே ஆட்சி செய்யும் ராணியாக செயல் படுவார்.
கோல்டன் ஃபிளீஸ் விருது

இளவரசியாக அறிவிக்கப் பட்ட தனது மகளுக்கு கோல்டன் ஃபிளீஸ் விருதையும் மன்னர் ஆறாம் ஃபிலிப் வழங்கினார். இந்த கோல்டன் ஃபிளீஸ் விருது ஸ்பெயினின் மிக உயர்ந்த கவுரவமாகும்.

அரசிக்கான முதல்படி

இனி சிறுமி லீயோனார் ஸ்பெயின் சிம்மாசனத்திற் குட்பட்டவர் ஆவார். இளவரசி யாக அறிவிக்கப் பட்டதன் மூலம் லியோனார் ராணி ஆவதற்கான முதல் படியை எட்டியுள்ளார்.
ஸ்பெயினின் வருங்கால அரசி.... அறிவித்த மன்னர் !
வருங்கால ராணிக்கு வாழ்த்து நாட்டின் இளவரசியாக அறிவிக்கப் பட்டுள்ள லியோனார்க்கு அரச குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். 

அந்நாட்டு மக்களும் தங்களின் வருங்கால ராணிக்கு வாழ்த்து களை தெரிவித்து வரு கின்றனர்.

அரசியாகும் வரிசையில் முதலிடம்

இதன் மூலம் ஸ்பெயினின் அரசியாகும் வரிசையில் இளவரசி லியோனார் முதலிட த்தில் உள்ளார். 

அண்மையில் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் சகோதரி யான இளவரசி கிறிஸ்டினாவின் இளவரசி பட்டம் பறிக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings