அமெரிக்க எழுத்தாளரும் கவிஞருமான ஹென்றி டேவிட் தோரே (Henry David Thoreau) சொல்லியிருக்கும் ஒரு பொன்மொழி உலக அளவில் வெகு பிரபலம்...
`நட்பின் மொழி, அதன் வார்த்தைகளில் அல்ல; அர்த்தத்தில் இருக்கிறது.’ வார்த்தைகளின் பலத்தை அறிந்தவர்களுக்கு வெற்றி மிக அருகில்.
இன்சொல்லைச் சொல்ல வேண்டிய இடத்தில் கடுஞ்சொல்லைப் பேசாதே...’ என்பதை `கனியிருப்ப காய் கவர்ந்தற்று...’ என்கிறார் திருவள்ளுவர்.
நேர்மறை எண்ணம் மட்டுமல்ல, நேர்மறையான சொற்கள் கூட நம் வெற்றிக்கு உதவும். நம் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் அனுமனுக்கு `சொல்லின் செல்வன்’ என்று பெயர்.
எதை, எந்த இடத்தில் பேச வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்ததால் தான் அனுமனுக்கு அப்படி ஒரு பட்டம்.
பாசிடிவ் வார்த்தைகள் நட்புக்குப் பாலம் அமைக்கும்; எதிரியைக் கூட சாந்தப்படுத்தும்.
பலரின் அசாத்தியமான வெற்றிக்கு அடித்தளமாக இருந்தவை அவர்களின் சிரித்த முகமும், இனிமையான சொற்களும் தான்.
பாசிட்டிவான சொற்கள், ஆபத்தில் கூட உதவும் என்பதை உணர்த்துகிறது இந்தக் கதை.
அது லண்டனி லுள்ள ஒரு பார்க். ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம். அந்தச் சிறுவன் பெயர் ஜான், எட்டு வயது. அவனது பக்கத்து வீட்டுப் பையன் ஆபிரஹாம்...
அவனுக்கும் அதே வயது. இருவரும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந் தார்கள். இவர்களின் துணைக்கு ஜானின் அப்பாவும், ஆபிரஹாமின் அம்மாவும் வந்திருந்தார்கள்.
இருவரும், இவர்களைக் கவனித்தபடியே ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஜான் திடீரென ஏதோ தோன்றிய வனாக ஒரு மரத்தில் ஏறினான். விறு விறுவென கிளைகளைப் பிடித்துக் கொண்டு மேலே போய் விட்டான்.
மேலே போனவன், ஒரு கிளையைப் பிடித்துத் தொங்கிய படியே இன்னொரு கிளைக்குத் தாவினான். அவனுக்கு அந்த விளையாட்டு உற்சாக மாக இருந்தது. கிட்டத் தட்ட அவன் அப்போது இருந்தது,
தரையி லிருந்து 30 அடி உயரத்தில்! கிளை முறிந்தால்..? அந்தக் கவலை அவனுக்கு இல்லை. இளம் கன்று பயமறியாது தானே!
ஜானைப் பார்த்த ஆபிரஹாமு க்கும் மரமேறும் ஆசை வந்து விட்டது. அவனும் மரத்தில் ஏறினான்.
ஆனால், அவனால் ஜானைப் போல மிக உயரமான இடத்துக்குப் போக முடிய வில்லை. அவன் ஏறியிருந்தது 10 அடி உயரம் தான்.
அவனும் ஒரு கிளையைப் பிடித்துத் தொங்கினான். பிறகு மெதுவாக இன்னொரு கிளைக்கு மாறினான். ஜானின் அப்பாவும் ஆபிரஹாமின் அம்மாவும் இருவரையும் பார்த்தார்கள்.
`இனியும் இவர்களை மரத்தில் இருக்க விடுவது ஆபத்து’ என்கிற முடிவுக்கு வந்தார்கள். குழந்தை களை இறங்கச் சொல்வதற் காக மரத்துக்கு அருகே போனார்கள்.
அந்த நேரத்தில் தான் அது நடந்தது. ஒரு பலத்த காற்று வீச ஆரம்பித்தது. மரம் தள்ளாடுவது போல வேகமாக அசைய ஆரம்பித்தது.
அவ்வளவு தான் ஜானின் அப்பா சத்தமாகச் சொன்னார்... ``ஜான்... கிளையைக் கெட்டியாகப் பிடிச்சுக்கோ!’’
அதேபோல பதற்றத் துடன் ஆபிரஹாமின் அம்மாவும் கத்தினார்...
`ஆபிரஹாம்! கீழே விழுந்துடாதே!’’
அடுத்த கணம் ஆபிரஹாம் மரத்தி லிருந்து கீழே விழுந்து விட்டான். நல்ல வேளையாக அவனுக்கு அடி பலமாக இல்லை.
கையிலும் காலிலும் லேசான சிராய்ப்பு மட்டும் தான். ஜானோ மெதுவாகக் கிளைகளைப் பிடித்துக் கொண்டு, பத்திரமாகக் கீழே இறங்கி விட்டான்.
ஆபிரஹாம், அவன் அம்மா, ஜான், அவன் அப்பா எல்லோரும் வீடு திரும்பி னார்கள்.
வழியில் அம்மா, ஜானின் அப்பாவிடம் கேட்டார்... ``ரெண்டு பயலுகளும்தான் மரத்துல ஏறினாங்க. ஆபிரஹாம் மட்டும் கீழே விழுந்துட்டான்.
ஜான் கீழே விழலையே... எப்படி?’’
ஜானின் அப்பா சொன்னார்... ``காத்து பலமா அடிச்சப்போ, நீங்க `ஆபிரஹாம்! கீழே விழுந்துடாதே!’ னு கத்தினீங்க இல்லியா?
அதனால தான் கீழே விழுந்தான். கஷ்டமான சூழ்நிலை யில நம்ம மனசுக்கு நெகட்டி வான உருவமும், எண்ணமும் தான் தெரியும்.
நீங்க `கீழே விழுந்துடாதே’னு சொன்னப்போ, அவனுக்கு கீழே விழுற மாதிரியான காட்சி தான் தோன்றி யிருக்கும்.
அதைத் தவிர்த்துட்டு, அவன் மூளைக்கு `விழுந்துடாதே’னு தகவல் அனுப்புற சின்ன அவகாசத்துல கீழே விழுந்துட்டான்.
ஆனா, ஜான்கிட்ட நான் `கிளையைக் கெட்டியாகப் பிடிச்சுக்கோ’ னு சொன்னதும் அவனுக்கு கிளையைப் பிடிச்சி ருக்குற காட்சி தோன்றி யிருக்கு.
அதான், கெட்டியாப் பிடிச்சுக் கிட்டான். பத்திரமா கீழே இறங்கிட்டான்.
Thanks for Your Comments