வரி மேல் வரி மக்களுக்கு... எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் !

0
மக்களாய் இருந்தால் அரசுக்கு வரி கட்டிக் கொண்டே இருக்க வேண்டும், எப்படியாவது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி யாகவோ, 
வரி மேல் வரி மக்களுக்கு... எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் !
எம்எல்ஏ வாகவோ ஆகி விட்டால் சலுகை களுடன் மாதா மாதம் அதிக சம்பளத் திற்கு பிரச்னை இருக்காது என்பதைத் தான் மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டுகள் மக்களுக்கு உணர்த்து கின்றன. 

மாநில பட்ஜெட்டில் எம்எல்ஏ க்களின் சம்பளம் இரட்டிப் பானது, மத்திய பட்ஜெட்டில் எம்பி க்களின் சம்பளம் அதிகரிக்கப் பட்டுள்ளது. 

இந்த நிதி யாண்டில் எந்தெந்த துறை களுக்கு எவ்வளவு நிதி, மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் 

என்னென்ன மாற் றங்கள் என்று ஏராளமான எதிர் பார்ப்பு களுடன் மத்திய பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருந்த மக்க ளுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக் கிறது. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் குறைந்த பட்சம் வருமான வரி விலக்கு உச்ச வரம்பிலாவது மாற்றம் இருக்கும் என்று சம்பள தாரர்கள் எதிர் பார்த்தனர். 

ஆனால் வர்த்த கர்கள் செலுத்தும் வரியை விட மாத சம்பளம் பெறுவோரின் வரி வருவாயே அதிக அளவில் இருப்பதாக அருண் ஜேட்லி பட்ஜெட்டில் சுட்டிக் காட்டினார். 
85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரி தாக்கல் செய்திருப் பதாகவும் கூறினார். 2017-18ம் நிதியாண்டில் நேரடி வரி 12.6 சதவீத மாகவும், மறைமுக வரி 18.7 சதவீ தமாகவும் அதிகரித்து ள்ளதாக கூறினார்.

மாத சம்பளதாரர் களுக்கு ஏமாற்றம்

தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை, வருமான வரி விலக்கு உச்ச வரம்பானது ரூ. 2.50 லட்சம் என்ற அளவிலேயே தொடரும் என்றும் அறிவித் துள்ளார். 

பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாத சம்பளம் பெறுவோரின் செலவுகளும் அதிகரித்துள்ள நிலையில் 

வருமான வரி விலக்கு உச்சவரம்பை எதிர் பார்த்து காத்திருந்த வர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

ஜனாதிபதி முதல் ஆளுநர் வரை சம்பள உயர்வு
ஆனால் மத்திய பட்ஜெட்டில் குடியரசுத் தலைவரின் சம்பளம் ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாகவும், துணை குடியரசுத் தலைவரின் மாத ஊதியம் ரூ. 1.25 லட்சத்தில் இருந்து ரூ. 4 லட்சமாகவும் அதிகரித் துள்ளது. 

இதே போன்ற ஆளுநர் களின் சம்பளமும் ரூ. 1.10 லட்சத்தில் இருந்து ரூ. 3.50 லட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

எம்பிகள் சம்பள உயர்வு

ஏற்கனவே குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், ஆளுநர் களுக்கு அரசு சார்பில் ஒதுக்கப் பட்ட பங்களாக் களில் தான் அவர்கள் வசித்து வருகின்றனர். 

இதில் அவர்க ளுக்கு எந்த செலவும் கிடையாது அவர்களுக் கான சிலிண்டர் முதல் மின் கட்டணம் வரை அனைத்தை யுமே அரசு செலுத்தி விடும். 

ஆனால் அவர்களுக் கான மாத சம்பளம் லட்சங் களில் இது மட்டுமல்ல பண வீக்கத்தை பொறுத்து 

எம்பிக்களின் சம்பளமும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தானாக உயர்த்த ப்படும் என்று அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

எம்பிகளுக்கு சலுகைகள்
நீதிபதிகளின் சம்பளம் உயர்த்தப் பட்ட போது தங்களின் சம்பளமும் உயர்த்த ப்பட வேண்டும் என்று எம்பிக்கள் கோரிக்கை விடுத்தன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. 

நாடாளு மன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட எம்பிகள் தவிர நியமன எம்பிகளும் உள்ளனர். இதில் சில பிரபலங் களுக்கும் எம்பி பதவி கொடுக்க ப்பட்டுள்ளது. 

ஏற்கனவே பிரபலமாக பல கோடிகளை குவித்து வைத்துள்ள வர்களுக்கு இனி மாத சம்பளத் திலும் உயர்வு கிடைக்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. 

இது தவிர எம்பிக ளுக்கு கார் படி, ரயில், விமான பயணத்தில் சலுகை என்று ஏராளமான சலுகை களும் இருக்கின்றன.

எம்.பி, எம்எல்ஏ என்றால் லட்சாதிபதி
மத்திய பட்ஜெட் மட்டுமல்ல, மாநில பட்ஜெட்டும் எம்எல்ஏ க்களின் சம்பள த்தை இரண்டு மடங்கு உயர்த்தி எம்எல்ஏ க்களை லட்சாதிபதி களாக்கி இருக்கிறது. 

மொத்த த்தில் வாக்களித்த மக்கள் வரி வரி என்று தாவு தீர வரி கட்டிக் கொண்டி ருக்க எம்.பிகள், எம்எல்ஏ க்கள் உள்ளிட் டோரின் சம்பளங்கள் வானுயர பரப்பதே பட்ஜெட்டுகள் மக்களுக்கு உணர்த்தும் உண்மை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings