வருமான உச்ச வரம்பில் மாற்றம் இல்லை? அருண்ஜெட்லி !

0
2018 - 19-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். 
வருமான உச்ச வரம்பில் மாற்றம் இல்லை? அருண்ஜெட்லி !
இந்த ஆட்சியின் கடைசி பொது பட்ஜெட் இது என்பதால், வர்த்த கர்கள் உட்பட அனைவரின் மத்தியி லும் மிகுந்த எதிர் பார்ப்பு எழுந்தது. 

சரியாக 11 மணிக்கு தாக்கல் செய்யப் பட்ட பட்ஜெட்டில், கிராமப்புற மேம் பாட்டுக்கு முக்கியத் துவம் அளிக்கப் பட்டுள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்தார். 

மேலும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்  களுக்கு வெகுவாக சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்கிடையே இன்று தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், வருமான உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. 
வருமான உச்ச வரம்பில் மாற்றம் செய்யப் படும் என அனைவரின் எதிர் பார்ப்பும் இருந்தது. அதற்கு மாறாக, வருமான உச்ச வரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்பட வில்லை என அருண் ஜெட்லி அறிவித்தார். 

அதன்படி 0 - 2.5 லட்சம் வருமானம் உள்ளவர் களுக்கு வரி கிடையாது. 

2 - 5 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர் களுக்கு 5 சதவிகிதமும், 

5 - 10 லட்ச ரூபாய் வருமானம் உடையவர் களுக்கு 20 சதவிகிதமும், 

ரூ10 லட்சத்து க்கு மேல் வருமானம் உடையவர் களுக்கு 30 சதவிகித மும் வரி வசூல் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 

இந்த நிலையில், வருமான உச்ச வரம்பில் மாற்றம் செய்யாதது ஏன் என அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். வரி ஏய்ப்பு செய்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந் துள்ளது. 
அதே வேளை, 85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இதனால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. ஆனால், இந்த கூடுதல் வருவாய் அரசுக்குப் போது மானதாக இல்லை. 

கடந்த 3 வருடங் களில், வருமான வரி உச்ச வரம்பில் அரசு பல்வேறு மாற்றங் களைச் செய்துள்ளது. எனவே, வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் ஏதும் செய்யாமல் பழைய முறையே பின்பற்றப் படும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings