இவரை யாரென்று நமக்குத் தெரியாது, படியுங்கள் !

இவரை யாரென்று நமக்குத் தெரியாது. வெள்ளையர்கள் இவரைத் தூக்கில் போடுவதற்கு முன்பு இவரது பற்களை சுத்தியால் அடித்து உடைத் தார்கள்.
இவரை யாரென்று நமக்குத் தெரியாது, படியுங்கள் !
நகங்களை பிடுங்கினார்கள்; எலும்புகளை உடைத்து நோகடித்தனர். நினை விழந்த நிலையில் இவரை தூக்கு மேடையில் ஏற்றினர்.

அவ்வளவு வெறி; குரூரம்; வன்மம். கேட்டால் அவர்களது கடவுள் அன்பே வடிவானவர். இவர் கடைசி யாக சொன்ன வார்த்தைகள் - "ஒருநாள் எனது சுதந்திர இந்தியா ஒளிரும்".

பாட புத்தகங் களில் இவர் இல்லை. காரணம் இவர் பெயரில் காந்தி இல்லை. பத்திரிகைகள் இவரை எழுதாது. 

ஏனெனில் அவற்றின் உண்மை எஜமானர் களான வெள்ளை யனை உண்மை யாக உறுதியாக எதிர்த்தவர். மாஸ்டர் தா என்று அன்போடு அழைக்கப் பட்ட சூர்யா சென் தான் இவர். சுதந்திரப் போராளி.
மார்ச் 24 இவருடைய பிறந்த நாள் நூற்றாண்டு கடந்து போனது. ஆனால் நாம் படிக்கிறோம் - "காந்தி தாத்தாவும் நேரு மாமாவும் போராடி சுதந்திரம் வாங்கித் தந்தார்கள்!"

வங்காளப் புரட்சி இயக்கத்தைத் தலைமை யேற்று நடத்தியவர் சூரியாசென். சிட்டகாங் என்ற இடத்தில் ஆங்கிலே யர்களின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றிய சூரியாசென். 

ஜலாலாபாத் மலைப் பகுதியில் ஏப்ரல் 22,1930 ஆம் ஆண்டில் பிரிட்டீஷாரை எதிர்த்தார். பிப்ரவரி 16,1933இல் கைது செய்யப்பட்ட சூரியாசென் ஜுன் 12,1934 இல் தூக்கிலிடப் பட்டார்.
பகத்சிங் வரலாற்றை முக்கால்வாசி மறைத்த காங்கிரஸ் சூரியாசென் வரலாற்றை முழுவதும் மறைத்து விட்டது.
Tags:
Privacy and cookie settings