ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வர தாமதம் ஏன்?

0
நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 
ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வர தாமதம் ஏன்?
மறைந்த ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வர, தனி விமானம் ஒன்று துபாய்க்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. 

இவரது, உடல் இன்று மும்பைக்கு கொண்டு வரப்படுவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது உடலை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 

அதன்படி, துபாய் சட்ட விதிமுறைகள்படி வெளி நாட்டவர் யாரவது மருத்துவ மனைக்கு வெளியே இறந்து விட்டால், மரணம் குறித்து போலீஸில் வழக்கு பதிந்து தடயவியல் சோதனை நடத்தப்படும். 
பின்னர் தான் எம்பார்மிங் செய்யப்பட்டு அந்த நாடுகளு க்கு உடல்கள் அனுப்பப்படும். இந்த நடைமுறை தான் தற்போது ஸ்ரீதேவி விவகாரத் திலும் பின்பற்றப் பட்டு வருகிறது.

மேலும் அவர் ஒரு நடிகை என்பதால் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் எடுத்து போலீஸார் செயல்பட்டு வருவதால் உடலை அனுபவ  த்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

அதனடிப் படையில் இன்றிரவு அவரது உடலை இந்தியா கொண்டு வர முடியாது. தடயவியல் சோதனை அறிக்கை கிடைத்த பின்பு தான் உடலை கொண்டு வர முடியும். 

தடயவியல் சோதனை நடைபெறும் இடத்தில் பத்திரிக்கை யாளர்கள் உட்பட யாருக்கும் அனுமதி தரப்பட வில்லை. இதற்கிடையே, அவரின் கழுத்தில் காயம் உள்ளதாக தற்போது சர்ச்சை கிளம்பி யுள்ளது. 
முன்னதாக அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்து வதற்காக பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் அவரது வீட்டின் முன் குவிந்து ள்ளனர். 

தென்னிந்திய திரைப் பிரபலங்கள், அஞ்சலி செலுத்த மும்பை விரைந்து ள்ளனர். 

இதற்கிடையே நாளை நண்பகல் 12.30 மணிக்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings