'யாஞ்சி யாஞ்சி' என்ற ஒற்றைப் பாடல் போதும் இவர் பெருமையைச் சொல்ல. தற்போதைய நியூ ஜென் இசையமைப் பாளர். எப்போதைக் குமான காதல் பாடல்களை உலகுக்குக் கொடுத்தவர்.
நான் சின்ன பையனா இருக்கும் போது என்னோட தாத்தா ஒரு ஆர்மோனியப் பெட்டி வெச்சிருந்தார்.
எல்லா பசங்களும் ஓடி ஆடி விளையாடி கிட்டு இருக்குற சமயத்துல எனக்கு கவனம் முழுக்க அந்த ஆர்மோனியப் பெட்டி மேலதான் இருந்துச்சு.
என் மனைவி ஜானெட்டைப் பார்க்கும் வரை, காதல் பத்தி கேட்டா இந்த ஆர்மோனியப் பெட்டியைத் தான் சொல்லத் தோணும்" அப்பா கூட்டுறவு வங்கியில மேனேஜர்.
அம்மா ஸ்கூல் ஹெட் மாஸ்டர். வீட்ல எப்போ பார்த்தாலும் படி படினு சொல்லி கிட்டே இருப்பாங்க.
நான் அதை யெல்லாம் காதுலயே வாங்கிக்காம மியூசிக் போட சார்ச்க்குப் போயிடுவேன். எங்க ஊர் பேரைச் சொன்னாலே எல்லாரு க்கும் அங்க போகணும்னு ஆசை வரும். அந்த அளவுக்கு அழகான ஊர்.
ஆனா, சினிமாவு க்குக் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஊர். சரியான தியேட்டர் கூட அங்க இல்லை. வேலைக்காக சென்னைக்கு வந்தாக ணும்ங்கிற நிலைமை.
அப்போ மியூசிக் போடணு ம்ன்ற எண்ணம் மட்டும் தான் இருந்ததே தவிர, சினிமாவு க்கு வரணும்னு துளிகூட நினைக்கலை. சென்னையில ஒரு ஐ.டி கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன்.
சைட் பிசினஸ் மாதிரி நிறைய விளம்பரங் களுக்கு மியூசிக் கம்போஸ் பண்ணிக் கொடுத்துட்டு இருந்தேன்.
அம்மா, அப்பாவைப் பொறுத்த வரை அவங்க பையன் நல்ல ஒரு நிரந்தர வேலையில செட்டில் ஆகணும்.
'தேவை யில்லாம சினிமாவுக்குப் போய் 'வாழ்க்கையை தொலைச் சுடாதே'னு அட்வைஸ் பண்ணிட்டே இருப்பாங்க.
அவங்க சொல்றதை நான் கேட்கவே இல்லை. 'இவன் தேற மாட்டான்'னு ஒரு கட்டத்துல கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க.
2010-ல கல்யாணம் ஆச்சு." என்று தனது ஃபிளாஷ் பேக்கை சொல்லி முடிக்க, "நமக்கு 2011-ல தான் கல்யாணம் ஆச்சு" என்று தலையில் செல்ல மாகத் தட்டினார் ஜானெட்.
"ஜானெட்டைக் கல்யாணம் பண்ணும் போது நான் ஒண்ணும் அவ்வளவு பெரிய மியூசிக் டைரக்டர் இல்ல. என்னை நம்பி எப்படி கல்யாணம் கட்டிக் கொடுத்தாங் கன்னே தெரியல.
ஜானெட்டுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான்" என்று சாம் முடிக்கும் முன்னரே, "அதான் இப்போ நீ இருக்கியே சாம்" என்று தோளில் சாய்ந்து கொண்டார் ஜானெட். "நாங்க ரெண்டு பேரும் ஒரே சர்ச்.
ரெண்டு பேரோட வீட்டுலேயும் கலந்து பேசி இந்தக் கல்யாண த்துக்கு ஏற்பாடு செஞ்சாங்க.
நிச்சய தார்த்தம் முடிஞ்சதுக்கு அப்பறம் நாங்க பைக்ல சென்னையில சுத்தாத இடமே கிடையாது.
எங்களோட பிரெண்ட்ஸ் எல்லாரும் எங்களை செமயா கிண்டல் பண்ணு வாங்க. இப்போ நிலைமை அப்படியே தலைகீழ்.
கொஞ்சம் கூட சாமுக்கு ஃபிரீ டைம் இல்ல. காலையில பையன் தூங்கி எழுந்த உடனே முதல்ல, "அப்பா வீட்டுக்கு வந்தாங்களா அம்மா"னு தான் கேட்பான்.
வந்துட்டு திரும்பி போய்ட் டாங்கடானு ஒரே பதிலை தினமும் சொல்ல வேண்டியதா இருக்கு. நானும் என்னோட பையனும் இவரை ரொம்பவே மிஸ் பண்றோம்." என்றார் ஜானெட்.
"என்னோட முதல் படம் 'அம்புலி'. இதுல என்னோட சேர்ந்து, வெங்கட் பிரபு சங்கர், சதிஷ், மெர்வின் சாலமன் ஆகிய நாலு பேரும் இசை அமைத்தி ருப்போம்.
இந்தப் படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் ஐ.டி வேலையையே விட்டு ட்டேன். பட வாய்ப்புகள் கிடைக் கிறது இந்தக் காலத்துல ரொம்ப கஷ்டம்.
சின்னச் சின்ன படங்களு க்குக் கூட ஈஸியா வாய்ப்பு கிடைச்சுடும். பெரிய படங்களுக் கான வாய்ப்பு என்பது குதிரைக் கொம்பு. அதுக்கான காத்திருப்பும் அதிகம்.
இந்தக் காத்திருப்பை எதிர் கொள்ள முடியாம த்தான் நிறைய பேர் சினிமாவை விட்டுப் போயிடுறாங்க.
அதுக்கு இடையில நம்ம திறமையையும் வெளிக்காட்டிகிட்டே இருக்கணும். நம்மளோட பொருளா தாரத்தையும் சமாளிக்கணும்.
சமயத்துல வேற வேலைக்குப் போயிடலா மானுகூட தோணும். கல்யாண த்துக்கு அப்புறமும் ரெண்டு வருடமா வாய்ப்புக் காக காத்திக் கிட்டுத் தான் இருந்தேன்.
அப்போ ஜானெட் ரொம்ப உறுதுணையா இருந்தாங்க. ஒவ்வொரு ஆல்பம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி சாம் கூலா தான் இருப்பார்.
நான் தான் ரொம்ப டென்க்ஷனா இருப்பேன். 'விக்ரம் வேதா' ஹிட் அடிக்கும்னு எங்களுக்கு முன்னாடியே தெரியும். எனக்கு யாஞ்சி அவ்வளவு பிடிக்கும்."
வக்கிரத்தின் உச்சம் - இந்த இளைஞர் செஞ்ச அருவருப்பான வேலை !என்று ஜானெட் கூறிக் கொண்டி ருக்கும் போது சாம் குறுக்கிட்டார். "நிறைய பேர் யாஞ்சி தமிழ் வார்த்தைனு நெனச்சுட்டு இருக்காங்க. இந்த மாதிரி ஒரு வார்த்தையே தமிழ்ல கிடையாது.
சீனாவுல இருக்குற ஒரு ஆறோட பெயர் 'யாஞ்சி'. வேறு ஏதோ ஒரு மொழியில 'திரும்பத் திரும்ப'னு ஒரு அர்த்தம் இருந்துச்சு.
ரொம்ப வித்தியாசமா இருக்கேனு இதை யூஸ் பண்ணிக் கிட்டோம்."என்று கூறி முடித்தார் சாம்.
Thanks for Your Comments