காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 -ஆக உயர்வு !

0
தேனி மாவட்டம் குரங்கணி மலை காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந் துள்ளது. 
காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 -ஆக உயர்வு !
மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி கவுந்தம் பாடியை சேர்ந்த கண்ணன் என்பவர் உயிரிழந்தார். 

தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் சென்னையை சேர்ந்த ஒரு குழுவினரும், ஈரோட்டைச் சேர்ந்த ஒரு குழுவினரும் மொத்தம் 36 பேர் மலையேற்ற த்தில் ஈடுபட்டி ருந்தனர். 

கடந்த ஞாயிறன்று அவர்கள் மலையில் இருந்து இறங்கும் போது குரங்கணி வனப்பகுதி யில் எதிர் பாரதவித மாக பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. 

இதனால் செய்வதறியாது திகைத்த இரு குழுவினரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இவர்களில் ஒரு சிலர் பள்ளமான பகுதியில் குதித்து உயிர் தப்பினர். 

இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாய மடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர். 
இதில் மேலும் 2 பேர் உயிரிழந் திருந்த நிலையில் கோவையைச் சேர்ந்த திவ்யா விஸ்வநாதன் 

மதுரை தனியார் மருத்துவ மனை ஒன்றில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இந்நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த தீ விபத்தில் சிக்கி படுகாய மடைந்த கண்ணன் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந் துள்ளார். 

இதனால் காட்டுத் தீக்கு பலியானவர் களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித் துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 

கண்ணன் உட்பட 4 பேரை தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவ குழுவினர் நேரில் சென்று பார்த்தனர். 

தீவர சிகிச்சை பிரிவில் உள்ள 4 பேரில் கண்ணன், அனுவித்யா ஆகியோரு க்கு சீறுநீரகம் செயலிழந் துள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தி ருந்தார்கள். 
இருவருக்கும் டயாலிசிஸ் முறையில் இரத்த சுத்திகரிப்பு மேற்கொள்ளப் பட்டு வருவதாக கூறி யிருந்தனர். இந்நிலையில் கண்ணன் உயிரிழந் துள்ளது. 

இந்நிலை யில் சென்னையை சேர்ந்த அனுவித்யா மதுரை மருத்துவ மனையில் உயிரி ழந்தார். குரங்கணி காட்டுத்தீயில் சிக்கிய அனுவித்யா 90 சதவீதம் அடைந் திருந்தார். 

மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களில் 2 பேர் இன்று உயிரிழந் தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings