காபி விலை ரூ.180... ப.சிதம்பரம் அதிர்ச்சி !

0
விமான நிலையத்தில் காபியின் விலை ரூ. 180 என்பதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
காபி விலை ரூ.180... ப.சிதம்பரம் அதிர்ச்சி !
இது தொடர் பாக தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை விமான நிலையத்தில் உள்ள காபிடே கடையில் தேநீர் கேட்டேன். சூடான நீரும், தேநீர் பையும் தந்தனர். 

அதன் விலை ரூ. 135 என்றதும் அதிர்ச்சி அடைந்தேன். எனவே, தேநீர் வேண்டாம் என மறுத்து விட்டேன். நான் செய்தது சரியா? தவறா? என கேள்வி எழுப்பி பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு ட்விட்டரில், காபி விலையை கேட்டபோது ரூ. 180 என்றனர். இதை யெல்லாம் யார் வாங்கு கிறார்கள் என கேட்டேன். பலர் வாங்கு கிறார்கள் என பதில் வந்தது. 

இதையெல் லாம் நான் அறிந்து கொள்ளாமல் காலத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறேனா? என குறிப்பிட்டும் பதிவிட்டி ருந்தார்.

இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ப.சிதம்பரத்தின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. 
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜ னிடம் கேட்ட போது, பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு என்பது போல காட்டு வதற்காக இதுபோல ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார். 

பாஜக ஆட்சியில் அத்தியா வசியப் பொருட்களின் விலை பெருமளவு குறைந்துள்ளது. ப.சிதம்பரம் குறிப்பிட்ட காபிடே நிறுவன த்தில் காபி, தேநீரின் விலை அதிக மாகவே இருக்கும் என்றார்.

இது தொடர்பாக சிட்டிசன் அன்டு சிவில் ஆக்ஷன் குரூப் (சிஏஜி) இயக்குநர் சரோஜா விடம் கேட்ட போது, உணவுப் பொருள் களுக்கான விலையை அரசு நிர்ணயிக்க வில்லை. இடத்துக்கு இடம் விலை வேறுபடு கிறது.

விமான நிலையங்களில் கூடுதல் விலை விற்பது குறித்து கடை உரிமை யாளர்களிடம் கேட்ட போது, 
கடைக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். விலை குறைய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings