போலீஸாரால் எட்டி உதைக்கப் பட்டதால் சாலையில் விழுந்து பலியான உஷாவுக்காகப் போராடி யதற்காக போலீஸாரால் கைது செய்யப்பட்ட 27 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தர விட்டது திருச்சி நீதிமன்றம்.
கடந்த 7ம் தேதி மாலை திருச்சி திருவெறும்பூர் கணேசா ரவுண்டானா அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த தஞ்சாவூர் மாவட்டம் சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா-உஷா தம்பதியினரை போக்குவரத்துக் காவல் ஆய்வாளர்
காமராஜ் எட்டி உதைத்த சம்பவத்தில் கர்ப்பிணி உஷா கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி- தேசிய நெடுஞ்சாலை யில் போக்குவரத்து பல மணிநேரம் ஸ்தம்பித்தது.
இந்நிலையில் காவல் துறைக்கும் போராட்ட த்தில் ஈடுபட்டவர் களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள், அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப் பட்டது.
இதனால் போலீஸார், போராட்டக் காரர்கள் மீது தடியடி நடத்தி கூட்ட த்தைக் கலைத்தது. இதில் 14 பேர் காய மடைந்தனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக 27 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடித்தது அவர்களை உடனடி யாக விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை முன் வைக்கப் பட்டது.
மேலும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்றார்கள். இந்நிலையில் கைது செய்யப் பட்டவர்கள் மீதான ஜாமீன் கோரிய வழக்கு திருச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி குமரகுரு முன்னிலையில்
இன்று விசாரணை க்கு வந்தது. கைது செய்யப்பட்ட 27 பேர் சார்பாக திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பன்னீர் செல்வம் வாதாடினார்.
விசாரணை க்குப் பின் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 27 பேருக்கும் தலா ரூ. 500 பிணையாகச் செலுத்தி விட்டு ஜாமீன் வழங்கி உத்தர விட்டார்.
மேலும், காவல் ஆய்வாளர் காமராஜ் மனு மீதான விசாரணையை நீதிபதி குமரகுரு, வரும் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தர விட்டார்.
இந்நிலையில் 27 பேர் மீதான ஜாமீன் மனு மீதான விசாரணை யில் போலீஸ் ஆட்சேபனை தெரிவித்த தாகவும், அதனால் மாலை வரை வழக்கு ஒத்தி வைக்கப் பட்டது என்கிற தகவல் வெளியான தால் நீதி மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தத் தகவலை போலீஸார், கைது செய்யப் பட்டவர் களுக்காக ஜாமீன் மனு விசாரணையில் போலீஸ் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்க வில்லை என்று மறுக்கிறார்கள்.
Thanks for Your Comments