சசிகலா பரோலுக்கு, எம்.பி ஒருவர் கடிதம் கொடுக்க வேண்டும் என்ற சூழலில், கோவை அ.தி.மு.க எம்.பி., நாகராஜன், பரோலுக்கு ஜாமீன் கடிதம் கொடுத்தி ருக்கிறார்.
'என்னிடம் யாரும் கடிதம் கேட்க வில்லை. நானாக முன் வந்தே கடிதம் கொடுத்தேன்' என அவர் விளக்கம் கொடுத்தி ருக்கிறார்.
சசிகலா வின் பரோலுக்கு அ.தி.மு.க எம்.பி- க்கள் யாரும் கடிதம் கொடுக்கா ததாலே, பரோல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட தாகச் சொல்லப் பட்டது.
50 உறுப்பின ர்களைக் கொண்ட அ.தி.மு.க- விலிருந்து ஒருவர் கூட கடிதம் கொடுக்க வில்லை என்ற புகாரும் எழுந்தி ருந்தது.
'சசிகலா 2 நாள்கள் முன்பே வந்து நடராசனைப் பார்த்திருக்க முடியும். ஆனால், தமிழக த்தின் ஒரு நாடாளு மன்ற உறுப்பினர் கூட சசிகலா பரோலில் வர கையெழுத்திட வில்லை.
இதை நினைக்கும்போது மிகுந்த மனவலியைத் தருகிறது' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.
இந்நிலை யில், சசிகலா வின் பரோலுக் காக அ.தி.மு.க-வைச் சேர்ந்த கோவை எம்.பி., நாகராஜ், பெங்களூரு சிறைத் துறைக்குக் கடிதம் கொடுத் திருப்பது தெரிய வந்திருக் கிறது.
இதை யடுத்து சசிகலா பரோலில் வெளி வந்தார். மக்களவை, மாநிலங்க ளவையில் மூன்றாவது பெரிய கட்சியாக, 50 எம்.பி- க்களைக் கொண்ட அ.தி.மு.க- விலிருந்து
ஒருவர் கூட சசிகலாவு க்கு ஆதரவாகக் கடிதம் கொடுக்காத நிலை யில், கோவை எம்.பி., நாகராஜன் கடிதம் கொடுத்தி ருந்தார். அதோடு, நடராசனின் இறுதிச் சடங்கு நிகழ்வி லும் அவர் பங்கேற்றி ருக்கிறார்.
பெங்களூரு மத்திய சிறைச் சாலை தலைமை கண்காணிப் பாளருக்குக் கொடுத்த கடிதத்தின் அடிப்படை யிலேயே அவர் விடுவிக்கப் பட்டதாகச் செய்திகள் வெளியாகி யுள்ளன.
இது தொடர்பாக, கோவை எம்.பி., நாகராஜ னிடம் பேசினோம். "பரோல் பெறுவதற்கு சிறைத் துறையில் சில விதி முறைகள் இருக்கி ன்றன.
அதில் ஏதாவது ஒரு எம்.பி கடிதம் கொடுக்க வேண்டும் என்பது ஒன்று போலிருக் கிறது. என்னிடம் யாரும் கடிதம் கேட்க வில்லை.
எனக்குத் தெரிந்த வுடன் நானே முன்வந்து கடிதம் கொடுத்தேன். இவர்கள் தான் கட்சியை வளர்த்த வர்கள். இந்தக் கடிதம் கொடுத்தது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்" என்றார்.
Thanks for Your Comments