ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல், வோடஃபோன்? என்ன காரணம்?

0
2016-ல் டெலிகாம் சந்தையில் ஜியோ ஏற்படுத்திய அதிர்வு இன்னும் அடங்க வில்லை. அறிமுக சலுகையாக 
ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல், வோடஃபோன்? என்ன காரணம்?
இலவச வாய்ஸ் கால், இலவச 4G என ஆஃபர்களை அள்ளி வீசியதன் மூலம் பல மில்லியன் மக்களை மிக விரைவில் வாடிக்கை யாளர்களாக மாற்றியது ஜியோ. 
அதற்கு பின்னும் குறைவான கட்டண த்தில் 4G சேவையை வழங்கவே தொடர்ந்து ஜியோ பயனாளர் களின் எண்ணிக்கை உயர்ந்தது. 

இதனால் இந்திய டெலிகாம் சந்தையில் மற்ற நிறுவனங் களுக்கு கடும் போட்டி ஏற்பட்டது. எல்லா நிறுவனங் களுக்கும் வருமானத்தில் அடி விழுந்தது. 

சிலர் அதை சமாளித் தனர்; சிலர் அதில் வீழ்ந்தனர். அப்படி சமீபத்தில் வீழ்ந்த நிறுவனம் ஏர்செல். 

எவ்வித முன்னறி விப்பும் இல்லாமல் ஏர்செல்லின் டவர்கள் அனைத்தும் திடீரென செயலி ழக்கவே, செய்வதறி யாது திகைத்தனர் அதன் வாடிக்கை யாளர்கள். 

சரி, உடனே வேறு நெட்வொர்க் கிற்கு மாறலாம் என்றால் போர்ட் கோடு கிடைப்ப திலும் சிக்கல்கள் எழுந்தன. 

இதனால் ஏர்செல் சிம்மையும் பயன்படுத்த முடியாமல், வேறு நிறுவனத் திற்கும் மாற முடியாமல் இன்னும் பல லட்சம் வாடிக்கை யாளர்கள் திணறி வருகின்றனர்.
ஏர்டெல்

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற சில சம்பவங்கள் மற்ற நெட்வொர்க் வாடிக்கை யாளர்கள் இடையே சின்ன சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது. 
கீழ் வயிற்று தசையை குறைக்க இத செய்யுங்க !
நேற்று முன்தினம் ஏர்டெல் நெட்வொர்க்கிலும், நேற்று சில இடங்களில் வோடஃபோன் நெட்வொர்க் கிலும் சேவை பாதிக்கப் பட்டது. 

இது என்ன பிரச்னை என்றே தெரியாமல் தவித்தனர் வாடிக்கை யாளர்கள். இறுதியில் ஏர்டெல் நிறுவனம், "சிறிய தொழில் நுட்ப கோளாறு தான்; 

சரி செய்து விட்டோம். மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்து ஆன் செய்யுங்கள்" எனத் தெரிவித்தது. 

வோடஃபோன் நிறுவனமும் தனது வாடிக்கை யாளரிடம், "இது தற்காலிக மான பிரச்னை தான். விரைவில் நிலைமை சரியாகி விடும்" எனக் கூறியிருக் கிறது. 

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங் களான இவற்றிற்கு என்னதான் ஆச்சு? 

ஏன் திடீரென இப்படி ஒரே நேரத்தில் பிரச்னை களை சந்திக்கின்றன? டெலிகாம் துறையில் இருக்கும் சில நிபுணர் களிடம் விசாரித்தோம்.
"ஏர்செல்தான் இந்தப் பிரச்னையின் மையப் புள்ளி. பிப்ரவரி மாத இறுதி யிலேயே ஏர்செல் நெட்வொர்க்கில் பிரச்னை தொடங்கி விட்டது. 

அப்போது எல்லா நிறுவன ங்களும், படிப்படி யாக ஏர்செல் செயலிழக்கும். 

அதனால் கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கை யாளர்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என்று தான் எண்ணிக் கொண்டிருந்தன. 
பனிக்குடத்துடன் பிறந்த பாம்பு - மிக அரிய காட்சி !
ஆனால், அந்நிறுவனம் திடீரென மொத்தமாக செயலிழந்து விட்டது. எனவே அந்நிறுவ னத்தின் பல லட்சம் வாடிக்கை யாளர்கள் உடனே வேறு நெட்வொர்க் மாறத் தொடங் கிவிட்டனர். 

இதனை எந்த டெலிகாம் நிறுவனமும் எதிர் பார்க்க வில்லை. எனவே, புதிய வாடிக்கை யாளர்களை சமாளிப் பதற்கான ஏற்பாடு களையும் உடனே செய்ய முடிய வில்லை. 

தற்போது ஏர்டெல் மற்றும் வோடஃபோன் இரண்டும் தங்கள் கட்டமைப்பை விரிவு படுத்தும் பணியில் ஈடுபட் டுள்ளன. இதனால் தான் தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது.

ஏர்செல்

பிப்ரவரி இறுதி முதல் மார்ச் மாதத்தி ற்குள் மட்டும் சுமார் 15 லட்சம் வாடிக்கை யாளர்கள் ஏர்செல்லில் இருந்து ஏர்டெல்லுக்கு மாறியிருக் கிறார்கள். 

இதே போல வோடஃபோன் நிறுவன த்திற்கு 10 லட்சம் வாடிக்கை யாளர்களும், பி.எஸ்.என்.எல் நிறுவன த்திற்கு 
சுமார் 3 லட்சம் வாடிக்கை யாளர்களும் ஏர்செல்லில் இருந்து வந்திருக் கின்றனர். 

இந்த எண்ணிக்கை இன்னும் கூடிக் கொண்டே செல்லும். வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை இந்தளவு உயர வேண்டு மானால் ஒவ்வொரு நிறுவனத் திற்கும் ஒரு ஆண்டாவது ஆகும். 
நல்ல செய்தி சொன்ன சிவன்... குஷியில் விஞ்ஞானிகள் !
ஆனால், ஏர்செல் பிரச்னை யால் தற்போது திடீரென உயர்ந்திருக் கிறது. இன்னும் பலரும் போர்ட்ட பிலிட்டி வசதிக்காக காத்திருப்ப தால்

இன்னும் உயரும். இந்த எண்ணி க்கையை சமாளிக்கும் அளவிற்கு இப்போது தான் கூடுதல் வசதிகள் செய்யப் பட்டு வருகின்றன. 

கூடிய விரைவில் இவை யெல்லாம் சரியாகி விடும். நிறுவனம் திவாலாக போகிறது என்பதெல் லாம் துளியும் உண்மை யில்லை.
நேற்று முன்தினம் ஏர்டெல் வாடிக்கை யாளருக்கு ஏற்பட்ட பிரச்னை போஸ்ட் பெய்டு நெட்வொர் க்கில் ஏற்பட்ட ஒரு தொழில் நுட்ப கோளாறால் வந்தது. 

சரியாக 3 மணிக்கு துவங்கிய சிக்கல் 7 மணிக்குள் ளாகவே சரி செய்யப்பட்டு விட்டது. ப்ரீபெய்டு வாடிக்கை யாளர்களு க்கு எந்த சிக்கலும் இல்லை. 

சில குறிப்பிட்ட போஸ்ட் பெய்டு வாடிக்கை யாளர்கள் மட்டும் தான் பாதிக்கப் பட்டனர். சில மொபைல் போன்களில் தானாகவே டவர் வந்து விட்டது; 

சில மொபைல் போன்களில் ஸ்விட்ச் ஆப் செய்து ஆன் செய்ய வேண்டி யிருந்தது. நேற்று வோடஃபோனில் ஏற்பட்ட சிக்கலும் இதே போல தொழில் நுட்பக் கோளாறி னால் தான்.
ஆர்பிட்டர் கருவி ஏழரையாண்டுகள் வரை செயல்படும் !
டவர்

ஜியோவின் வருகைக்குப் பின்னர் எல்லா டெலிகாம் நிறுவனங் களிலும் வருவாய் பாதிக்கப் பட்டது உண்மை தான். 

முதலில் குறைந்த கட்டண த்தில் சேவை அளிக்க மற்ற டெலிகாம் நிறுவனங் களால் முடிய வில்லை. 

தற்போது அந்த நிலைமை ஓரளவிற்கு சரியாகி விட்டது. இன்னும் தொழில் நுட்ப கோளாறுகள் தொடர்வ தால், 

ஏர்செல் வாடிக்கை யாளர்கள் சிக்கல்கள் எப்படியும் இன்னும் ஓரிரு மாதங் களாவது இருக்கும் என எதிர் பார்க்கலாம்."
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings