நெல்லை மாவட்ட த்தில் அங்கன் வாடிப் பணி யாளரிடம் லஞ்சம் கேட்டு உயரதிகாரி டார்ச்சர் செய்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால்
அதற்குக் காரண மானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கன் வாடி பணி யாளர்கள் கலெக்டர் அலுவலக த்தை முற்றுகை யிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
நெல்லை மாவட்டம், கல்லிடைக் குறிச்சியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் கடந்த இரு வருடங் களுக்கு முன்பு மரண மடைந்து விட்டார்.
இவரது மனைவி சுமதிக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர் வாகைக் குளம் கிராமத்தில் அங்கன் வாடி பணியாளர் வேலை கிடைத்தது.
விதவைக் கான ஒதுக்கீட்டில் அவருக்குப் பணி வழங்கப் பட்டது. அவரது மகள்கள் இந்துமதி, ரோகிணி ஆகியோர் கோவை யில் விடுதியில் தங்கி ப்ளஸ் டூ மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
தகுதியின் அடிப்படை யில் சுமதிக்கு வேலை கிடைத்த போதிலும், திட்ட அலுவலர் ஜெயசூரியா,
குழந்தைகள் நல வளர்ச்சி த்திட்ட அலுவலர் சாந்தி ஆகியோர் லஞ்சப் பணம் கேட்டு அவரிடம் டார்ச்சர் செய்த தாகத் தெரிகிறது.
ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து விட்டு தொடர்ந்து பணி யாற்றுமாறு அதிகாரிகள் வற்புறுத்தி யுள்ளனர்.
சுமதியின் இடத்தில் பணியாற்ற 3 லட்சம் ரூபாய் கொடுப்பதற்கு ஆட்கள் தயாராக இருப்பதா கவும் அவர்கள் நெருக்கடி கொடுத்து ள்ளனர்.
தொடர்ச்சி யாக அவருக்கு டார்ச்சர் அளிக்கப் பட்டதால் மனமுடைந்த சுமதி கடந்த 11-ம் தேதி, உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை க்கு முயன்றார்.
மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (21-ம் தேதி) உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல வளர்ச்சித் திட்ட அலுவலர் சாந்தி சஸ்பெண்ட் செய்யப் பட்டார்.
ஆனாலும், திட்ட அலுவலர் ஜெயசூரியா மற்றும் வளர்ச்சித் திட்ட அலுவலர் சாந்தி ஆகியோரை கைது செய்யவும் சுமதி குடும்பத்தி னருக்கு இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
அது வரையிலும் உயிரிழந்த சுமதியின் உடலை வாங்கப் போவதில்லை என இந்தியத் தொழிற்சங்க மையத்தின் கீழ் செயல்படும் அனைத்து ஊழியர் களின் கூட்டமைப் பினரும் போராடி வருகின்றனர்.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக த்தை ஆயிரக்கணக் கான ஊழியர்கள் முற்றுகை யிட்டு அலுவலகம் முன்பு
தரையில் அமர்ந்து தர்ணா போராட்ட த்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதில், 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், குடும்பத்தில் ஒருவரு க்கு அரசு வேலை வழங்கவும் ஒப்புக் கொண்டார்.
அத்துடன், சுமதி அளித்துள்ள வாக்கு மூலத்தின் அடிப்படை யில் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
ஆனால், அதிகாரி களை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவ தாகத் தெரிவித்து ஆயிரக்கணக் கான
அங்கன் வாடிப் பணி யாளர்கள் தொடர்ந்து கலெக்டர் அலுவலக த்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டக் காரர்களிடம் கலெக்டர் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சு வார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்ட தால் போராட்டம் கைவிடப் பட்டது.
Thanks for Your Comments