அறிவியலின் வளர்ச்சியால், இஸ்ரேலின் புதிய கண்டு பிடிப்பான வைசார்ஜ் என்ற கருவி இதை சாத்திய மாக்கியிருக்கிறது.
இந்த ‘வைசார்ஜ்‘ என்பது வயர்லெஸ் சார்ஜர். எந்தவித நேரடித் தொடர்பும் இல்லாமல் நம் கைபேசிக்கு சார்ஜ் செய்யும் கருவி இது.
இந்தக் கருவியில், டிரான்ஸ்மிட்டர், ரிசீவர் என்ற இரண்டு முக்கியமான அலகுகள் உள்ளன. இதில் டிரான்ஸ்மிட்டர் என்பது சூரிய ஒளியிலிருந்து அகச்சிவப்புக் கதிர்களைச் சேகரித்து, ரிசீவர் யூனிட்டுக்கு அனுப்புகிறது.
அப்படிப் பெற்ற ஒளிக் கதிர்களை, ரிசீவர் தன் மின் அழுத்த செல் என்ற பகுதி மூலமாக, மின் திறனாக மாற்றுகிறது.
இந்தப் புதிய கருவி, ஸ்டெப்லைசர் போல வடிவமைக்கப் பட்டுள்ளது. நமது வீடுகளிலோ அலுவலகங் களிலோ இதைப் பொருத்திக் கொள்ளலாம்.
வீட்டில் நுழைந்தால் எப்படி வைபை தானாக கனெக்ட் ஆகி விடுகிறதோ, அதேபோல வைசார்ஜை ஆன் செய்து விட்டால், இந்தக் கருவியில் உள்ள டிரான்ஸ் மிட்டர் மொபைலை சார்ஜ் செய்யத் தொடங்கி விடுகிறது.
சரி, ஒரு வேளை ஏற்கனவே முழு சார்ஜுடன் உள்ள மொபைலை யும் தானாக சார்ஜ் செய்யுமா என்று நினைக்க வேண்டாம்.
இந்தக் கருவியில் உள்ள டிரான்ஸ் மிட்டர் மொபைலு க்குப் போதுமான அளவு சார்ஜ் இருக்கிறதா என்று சரிபார்த்த பிறகு சார்ஜ் செய்யத் தொடங்கும்.
சார்ஜ் ஆகி விட்டால் தானாகவே சார்ஜ் செய்வதை நிறுத்திக் கொள்ளும். இனி வீட்டுக்கு வந்தால், சார்ஜரைத் தேடி அலைய வேண்டாம். நம் மொபைலை ஓரமாக வைத்து விட்டு வேலையைப் பார்க்கலாம்.
மொபைல் தானாகவே சார்ஜ் ஆகிவிடும். இந்தக் கருவி உள்ள இடத்தி லிருந்து 10 மீட்டர் தொலைவு வரை நாம் எங்கிருந் தாலும் மொபைலுக்கு சார்ஜ் செய்து கொள்ளலாம்.
வீட்டில் ஒரு கருவி இருந்தாலும், ஒரே சமயத்தில் இரண்டு மொபைலை இது சார்ஜ் செய்து விடும்.
மொபைல் மட்டுமல்ல, வயர்லெஸ் வெப்கேம், வயர்லெஸ் ஆடியோ போன்ற பிற மல்டிமீடியா சாதனங் களையும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இந்த வைபை சார்ஜரை அடுத்த ஆண்டு முதல் அமெரிக்கா வில் ரெயில் நிலை யங்கள், ஷாப்பிங் மால்களில் அறிமுகம் செய்யத் திட்ட மிடப் பட்டுள்ளது.
Thanks for Your Comments