‘ட்விட்ட’ரில் உங்களைப் பின்தொடர் பவர்களைப் (‘ஃபாலோயர்ஸ்’) பெறுவ தற்குப் பல வழிகள் உண்டு.
நீங்கள் இணைய த்துக்கு வெளியிலும் பிரபலமான ஆள் என்றால், ஒரு ட்விட்டர் கணக்கைத் தொடங்கி, நீங்களும் ட்விட்டரில் இணைந்து விட்டதாக அறிவித்து விட்டால் போதும்.
நீங்கள் பிரபல மானவரல்ல என்றால், இருக்கவே இருக்கிறது பழைய பாணி வழிமுறை.
உங்களுக்கு விருப்ப மான விஷயங்கள் தொடர் பாகத் தொடர்ந்து பதிவுகளை எழுதி, ட்விட்டரில் உங்களை நிலை நிறுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
இன்னொரு வழியும் உண்டு. ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் வெளியாகி யிருக்கும் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருப் பது போல்,
பின் தொடர்ப வர்களை உருவாக் கும் நிறுவன த்துக்குப் பணம் கொடுத்து, அதை நிறை வேற்றிக் கொள்ளலாம்.
போலி யான கணக்கு களில் ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ் உங்களு க்குக் கிடைப்பார்கள். விஷயம் எளிதானது தான். ஆனால், அது மோசடி!
சமூகத்தில் தாக்கம் செலுத்து பவர்கள் என்று கருதப்படும் பல அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்தி ரங்கள், விளையாட்டு வீரர்கள்,
எழுத்தா ளர்கள் உள்ளிட்ட பிரபலங் களுக்கு இயல் பாகவே பின் தொடர்ப வர்கள் இருப்பார்கள் என்றாலும்,
மேலே சொன்ன வழி முறையைப் பயன் படுத்தித் தான் ஏகப்பட்ட ஃபாலோயர்’ஸை அவர்கள் பெற்றிருப் பார்கள் என்று தெரிகிறது.
‘தி ஃபாலோயர் ஃபேக்டரி’ எனும் அந்தக் கட்டுரையின் தலைப்பு சொல்வது போலவே, ‘டெவுமி’ எனும் ஒரு நிறுவனம்
தனது பல்வேறு வாடிக்கை யாளர்களு க்கு இதுவரை மொத்தம் 20 கோடி ஃபாலோயர்ஸை வழங்கி யிருக்கிறது.
அந்நிறுவனம் உரு வாக்கி யிருக்கும் 35 லட்சம் போலிக் கணக்கு களிலிருந்து தான் இத்தனை ஃபாலோயர்ஸை வழங்கி யிருக்கிறது.
இப்படி ஃபாலோயர்ஸ் விற்பனையைச் செய்வது நிச்சயம் இந்த ஒரு நிறுவனம் மட்டுமாக இருக்க முடியாது.
இது, தன்னை மிகப் பெரிய ஆளுமை யாகக் காட்டிக் கொள்வதற் காக எதையும் செய்ய நினைக்கும் மனிதரின் ஆசை தான் அல்லவா! வழக்கம் போலவே,
இதைச் சாத்திய மாக்குகிறது தொழில் நுட்பம். சுருக்க மாகச் சொன்னால், தாக்கம் செலுத்தக் கூடிய விஷயம்
ஒன்றைத் தவறாகப் பயன் படுத்திக் கொள்ள ஒருவர் விரும்பினால் இப்படித்தான் நடக்கும்.
சிறிய அளவி லானது என்றாலும், ட்விட்டரின் தாக்கம் மிகப் பெரியது. வெறும் 330 மில்லியன் பயனா ளர்கள் கொண்ட ட்விட்டர்,
ஏழு பில்லியன் மக்கள் தொகை கொண்ட உலகில் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது.
பெரிய அளவில் புதிய செய்திகளை வெளியிடும் தளமாக இருக்கும் ட்விட்ட ரில், செய்தி நிறுவனங்கள் தங்கள் செய்தி களைப் பதிவேற்று கின்றன.
எனவே, ட்விட்டரில் என்ன நிகழ்ந் தாலும் அது உலகெங்கும் பிரபலமாகி விடுகிறது.
ட்விட்டர் பெரிய அளவில் பேசப்படும் சமூக வலைதளம் தான் என்றாலும், முதன் முதலில் காலாண்டு லாபம் மிகச் சமீபத்தில் தான் அந்நிறுவன த்துக்குக் கிடைத்தது.
செலவைக் குறைக்கும் நடவடிக்கை தான் இந்த லாபத்து க்குக் காரணம் என்று கூறும் ஆய்வா ளர்கள், ட்விட்டர் போதுமான பயனாளர் களைச் சேர்க்க வில்லை என்றும் சுட்டிக் காட்டு கிறார்கள்.
தனது பயனாளர் களின் எண்ணி க்கையை அதிகரிக்க வேண்டிய சூழலில், போலிப் பயனாளர் களைத் தேடித் தேடிக் களைய வேண்டிய கட்டாயத் துக்கு ஆளாகி யிருக்கிறது ட்விட்டர்.
சமூக வலை தளங்களில் போலிக் கணக்கு களைப் பயன் படுத்தி, அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலை யிட்டதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து
ஃபேஸ்புக், கூகுள் போலவே ட்விட்டரும் தனது பயனா ளர்கள் குறித்த விவரங் களை ஆராய்ந்து வருகிறது. சந்தேகத்துக் குரிய பயனா ளர்களை நீக்கி வருகிறது.
எனினும், செய்ய வேண்டிய விஷ யங்கள் நிறைய உண்டு. ட்விட்டர் தொடங்கப் பட்டு 11 ஆண்டு களுக்கும் மேலாகிறது.
இந்தக் கால கட்டத்தில், வெறுமனே நிலைத் தகவலைப் பதிவிடும் தளம் எனும் நிலையி லிருந்து, சுய விளம்பரச் சாளரமாகி யிருக்கிறது;
அரசுக்கு எதிரான போராட்டக் காரர்கள் மற்றவர் களை ஒருங்கிணைப் பதற்குப் பயன் படுத்தப்பட்ட தளம் எனும் நிலையி லிருந்து,
அதிகார வர்க்கத்தினர் விரும்பும் ஒரு தளமாகி யிருக்கிறது. தாக்கம் செலுத்தும் திறன் தான் ட்விட்டரின் மிகப் பெரிய பலம்.
நம்பகத் தன்மை சார்ந்த பிரச்சினைகள் அந்தப் பலத்தைச் சிதைப்பது பெரும் பிரச்சி னையை ஏற்படுத்தும் என்பதை ட்விட்டரும் நன்றாகவே தெரிந்து வைத்திருக் கிறது
Thanks for Your Comments