மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கதிர், ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளைத் திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி யுள்ளது.
மதயானைக் கூட்டம்’ படத்தில் அறிமுக மானவர் நடிகர் கதிர். முதல் படத்தி லேயே நல்ல வரவேற்பைப் பெற்றார். இதைத் தொடர்ந்து கிருமி, என்னோடு விளையாடு உள்ளிட்ட படங் களிலும் நடித்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘விக்ரம் வேதா’ படமும் இவருக்கு மேலும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
இந்நிலை யில், நடிகர் கதிர் ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளைத் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மார்ச் 4 ஆம் தேதி ஈரோட்டில் இவர்கள் திருமணம் நடைபெறு வதாகவும், அதன்பின் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறு வதாகவும் கூறப்பட் டுள்ளது.
Thanks for Your Comments