தொழிலதிபர் என்ற பெயரில் வங்கியில் மோசடி யாக கடனை வாங்கி கொண்டு அதை திருப்பி செலுத்தாதவர் களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
வங்கிகளில் தொழில் தொடங்க பெரிய நிறுவனங்கள் முதல் சிறு குறு விவசாயிகள் வரை அவர்களின் பணம் திருப்பி செலுத்தும் திறமைக் கேற்ப கடன்கள் வழங்கப் படுகின்றன.
பலர் இந்த கடன்களை வாங்கிக் கொண்டு வங்கியில் ஒழுங்காக செலுத்தி மேலும் மேலும் வளர்கின்றனர்.
ஆனால் இன்னும் சிலரோ பல்வேறு வங்கிகளில் மோசடி யாக கடனை வாங்கி சொகுசு வாழ்க்கை யில் செலவிட்டு கடைசியில்
வங்கி களுக்கு பட்டை நாமம் போடும் தொழிலதிபர் களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இது போன்ற மோசடி மன்னர்களை வங்கிகளும் கெடுபிடி காட்டாமல் ஏழை எளிய வியாபாரி களை கேள்வி கேட்டு அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தள்ளி விடுகின்றனர்.
விஜய் மல்லையா, நீரவ் மோடி, விக்ரம் கோத்தாரி, சுபிக்ஷா சுப்பிரமணியன், கனிஷ்க் நகைக் கடை உரிமை யாளர் பூபேஷ் குமார் ஜெயின்
ஆகியோர் தொழிலதிபர் என்ற போர்வையில் கொள்ளையர் களாகவே மாறி விட்டனர் என்பது வேதனைக் குரிய சம்பவம்.
ரூ.9000 கோடி
கிங்பிஷர் நிறுவன த்தின் உரிமையாளர் விஜய் மல்லையா பல்வேறு நிறுவனங் களில் ரூ.9000 கோடி கடன்களை பெற்று கொண்டு அதை திருப்பி செலுத்த வில்லை.
வங்கி அதிகாரிகள் கடனை திருப்பி செலுத்து மாறு அழுத்தம் கொடுத்த போது லண்டனுக்கு தப்பி சென்றவர்தான், இது வரை திரும்பவே இல்லை.
மோசடி மன்னன்
வங்கி மோசடியில் கைதேர்ந்த வரும் பிரபல வைர வியாபாரியு மான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பரோடி கிளையில் ரூ.11 ஆயிரம் கோடிக்கு
கடன் பத்திரங்கள் மூலம் முறைகேடு செய்துள்ளதை வங்கி அதிகாரிகளே கண்டுபிடித்து விட்டனர். அவரும் வெளி நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.
சிக்கினார்
பிரபலமான ரோட்டோமேக் பென் நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி, பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு ரூ 800 கோடி கடனை திரும்ப செலுத்த வில்லை என புகார் எழுந்தது.
இந்நிலை யில் வெறும் 800 கோடி யில்லை அது பல்லாயிரம் கோடி என்று தெரிய வந்துள்ளது. இதை யடுத்து அவர் கைது செய்யப் பட்டார்.
சூப்பர் மார்க்கெட்
13 வங்கிக ளிடம் இருந்து ரூ. 750 கோடி மோசடி யாக கடன் வாங்கிய தாக சுபிக்ஷா நிறுவன உரிமையாளர்
சுப்ரமணியன் மீது குற்றச் சாட்டு எழுந்தது. இதை யடுத்து அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
தங்க நகை நிறுவனம்
14 வங்கிகளை மோசடி செய்து சென்னையை சேர்ந்த தங்க நகை நிறுவனம் கனிஷ்க் ரூ. 824 கோடி மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
பனிக்குடத்துடன் பிறந்த பாம்பு - மிக அரிய காட்சி !
இந்த மோசடி குறித்து சிபிஐக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடிதம் எழுதி யுள்ளது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கி களை மோசடி செய்து ரூ. 824 கோடி கடன் பெற்றுள்ளார்.
இப்படியே தொழிலதிபர்க ளெல்லாம் வங்கியில் பணத்தை கொள்ளை யடிக்கும் செயல் நீண்டு கொண்டே போகிறது.
Thanks for Your Comments