தென் மாவட்டங்களில் நாளுக்கு நாள் பெருகி வரும் இ-வேஸ்ட் கழிவுகளால் இயற்கை வளங்கள் சீரழிந்து வருகின்றன.
இதை கட்டுப் படுத்த அரசு நடவடிக்கை மட்டுமின்றி மக்களு க்கும் விழிப்புணர்வு செய்ய வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்து கின்றனர்.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங் களில் சமீப காலமாக இ-வேஸ்ட் எனும் எலக்ட்ரானிக் குப்பைகள் அதிகளவில் குவிந்து வருகிறது.
அணு குண்டை விடவும் கொடூரமான இந்த டெட் வேஸ்ட் என்ற விஷக் குப்பையால் கடல், மலை, காற்று, நிலம் என அனைத்து இயற்கை வளங்களும சீரழிந்து வருகின்றன.
2ல் இருந்து 16 சதவீதத்தை தொட்டது
2000ம் ஆண்டில் 2 சதவீதமே இருந்த இ-வேஸ்ட் குப்பையின் அளவு, தற்போது 16 சதவீதத்தை தொட்டிருக் கிறது என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
மறு சுழற்சிக்கு எடுக்கப் பட்டது போக, பெரு வாரியான எலக்ட்ரானிக் குப்பைகள், சாதாரண குப்பை களுடன் கலந்து நிலத்தில் தான் கிடக்கிறது.
செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள், உபயோக மற்ற கண்டன்சர்கள், சிம்கார்டுகள், எலக்ட்ரானிக்ஸ் பிளேட்டிங், சர்க்யூட் போர்டுகள்,
ரேடியோக்கள், சிடி டிஸ்க்குகள், டிவி, பாதரசம், டியூப்லைட்கள், சிஎப்எல் பல்புகள்... என இக்குப்பை யின் அளவு நாளுக்கு நாள் எகிறி வருகிறது.
கடல், ஆறு, குளம் என நீர்நிலை ஓரங்களிலும் இ- வேஸ்ட் குப்பைகள் கொட்டப் படுகின்றன.
ஜீரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் முறையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை தனியாகப் பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யவும்,
மற்ற பொருட் களை டீப் பரியல் முறையில் ஆழக்குழி தோண்டி புதைக்கவும் வேண்டும்.
ஆனால், இதற்கான கடும் சட்டங்களும், நடவடிக் கைகளும், மக்களிடம் விழிப்புணர்வும் இல்லை.
சிங்கம்- 3 பட பாணியை போல்...
கேரள மாநிலத்தின் பெருமளவு எலக்ட்ரானிக் கழிவுக் குப்பைகள் தேனி மாவட்ட எல்லையில் கொட்டப் படுவதாக புகார் உள்ளது.
சிங்கம்-3 படத்தில் வெளிநாட்டு மருத்துவ கழிவுகளை இந்தியா விற்கு கொண்டு வருவது போல்
கொல்லம் துறை முகத்திற்கு கப்பல்களில் பழைய பொருட்கள் என்று வெளிநாட்டு எலக்ட்ரானிக் கழிவுகள் வருகின்றன.
இவற்றை புரோக்கர்கள் குறைந்த விலைக்கு வாங்கி,
வாகனங் களில் ஏற்றி வந்து மதுரை உள்ளிட்ட இடங்களில் ஊருக்கு வெளியே உதிரி பாகங்களை உடைத்தெடுத்து,
மிச்சப் பட்டதை கழிவாக தென்மாவட்ட நிலங்களில் கொட்டுவதும் தொழிலாக தொடர்கிறது.
கடும் சட்டமும், விழிப்புணர்வும் அவசியம். இது குறித்து எலக்ட்ரானிக்ஸ் துறை நிபுணர் காசீம் பாய் கூறும்போது, ‘‘எலக்ட்ரிக்,
எலக்ட்ரானிக் கருவியில் பழுதான பொருளை மட்டும் மாற்றும் ‘சிப் லெவல்’ சர்வீஸ் இருந்தது.
இப்போது பெரிய திரை டிவி என்றாலும், உள்ளங்கை அளவில் சிறிய ‘போர்டு’ வந்து விட்டது.
பேஸ்ட் மாதிரி தடவி ஐசி வரை அதற்குள் ளாகவே வந்து விடுவதால், தற்போது ‘போர்டு லெவல் சர்வீஸ்’ முறையில் போர்டையே முழுமையாக அகற்று கிறோம்.
இதனாலும் இ-கழிவு அதிகரித்துள்ளது. தெருவில் வீசும் பழுதான தெர்மா மீட்டர், ரத்த அழுத்த கருவி களிலும் பாதரசம் இருக்கிறது.
மண்ணில் மரங்களை இது வளர விடுவ தில்லை. குப்பை பொறுக்கு வோரும் இ-கழிவுகளை எடுப்ப தில்லை.
எலக்ட்ரானிக்ஸ் போர்டு தயாரிப்போர் சர்க்யூட் உருவாக்கிட, ‘பெரிகுளோரைடு’ எனும் ஒருவித அமிலத்தை பயன் படுத்தி, மெட்டலை அரிக்க செய்கிறோம். இது மண் வளத்தை கெடுக்கிறது.
மொத்தத்தில் தென் மாவட்டங்களில் பெருகி வரும் இ-கழிவு களை கட்டுப் படுத்த கடும் சட்டமும், மக்கள் விழிப்புணர்வும் அவசியம் வேண்டும்,’ என்றார்.
எடுத்தது கொஞ்சம்... மிச்சமோ அதிகம்
பழைய பேட்டரியில் ஈயம், காரியம் உருக்கி எடுத்தது போக மீதி இ-கழிவாகவே மாறுகிறது. டிரான்ஸ்பார்மரில் ஐகோர்,
ஈகோர் பாகங்கள் இரும்புக்கும், காயில், காப்பர் போக காயிலைச் சுற்றிய பாபின் உள்ளிட் டவையும் குப்பைக்கே போகிறது.
டிவியை உடைத்தால் சில ஐசி போக, முழு எலக்ட்ரானிக் போர்டும் குப்பைக்கே போகிறது.
கம்ப்யூட்டரை உடைத் தாலும், இரும்பு, காயில் பகுதிகள் போக, எலக்ட்ரானிக் போர்டும், மானிட்டரும் குப்பைக்கே போகிறது.
கீழக்கரை சிவா கூறிய தாவது,
மேற்கத்திய நாடுகளில் உபயோகம் செய்து தூக்கி எறிய கூடிய எலக்ட்ரானிக் குப்பைகளை மறு உபயோகம் என்ற பெயரில் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
இதனை கண் காணித்து தடுக்க வேண்டும். அப்படி செய்வதி னால் இந்தியா வில் சேர கூடிய இ.வேஸ்ட் குப்பைகளை ஓரளவு தடுக்க முடியும் என்றார்.
இது குறித்து எபன் கூறிய தாவது,
இந்தியா வில் குறிப்பாக தமிழகத்தில் இ.வேஸ்ட் குப்பைகளி னால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து முழுமை யான விழிப்புணர்வு இல்லை.
இதுகுறித்து பொது மக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் ஒவ்வொரு நகரத்திலும் எலக்ட்ரானிக் குப்பைகளை சேமிக்க தனி இடம் ஒதுக்கப்பட்டு கண் காணிக்கப்பட வேண்டும் இதன் மூலம் கணக்கிடப் பட்டு ஒழுங்குப் படுத்தலாம் என்றார்.
Thanks for Your Comments