எல்கேஜிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் கட்டணம் !

0
பெற்றோரில் ஒருவர் வெளி நாட்டில் இருந்து, அவரது பிள்ளையை தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்றால், விண்ணப்பப் படிவங்களை சற்று கவனமாக படிக்க வேண்டியது அவசியம்.
எல்கேஜிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் கட்டணம் !
என்ன? விண்ணப்பப் படிவங்களை கவனமாக படிக்க வேண்டுமா? அதுவும் பெற்றோர் வெளி நாட்டில் வேலை செய்வ தற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று பலரும் கேள்வி கேட்கலாம்?
கல்விக் கட்டணக் கொள்ளை பற்றி சொல்ல வந்து இங்கு வேறு எதையோ சொல்கிறோம் என்று குழம்ப வேண்டாம். விஷயம் இருக்கிறது.

கல்விக் கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை யடிக்கும் தனியார் பள்ளிகள் பற்றி இன்னும் எத்தனை ஆண்டு களுக்குத் தான் எழுதிக் கொண்டி ருக்கப் போகிறோமோ? 

என்று கலங்கும் நேரத்தில் அதிலும் பல நுணுக்கங் களை செய்து நம்மை இன்னும் கதிகலங்க வைக்கிறார்கள் தனியார் பள்ளி நிர்வாகத்தினர்.

பெரிய பள்ளிகளில் தங்கள் பிள்ளை களை படிக்க வைக்கும் பெற்றோரிடம் கல்விக் கட்டணம் என்று ஒரு வார்த்தையைச் சொன்னால் மாய்ந்து மாய்ந்து பேசுவார்கள். 

ஆனால் என்ன செய்வது? நல்ல பள்ளி, மாணவர் களின் எதிர்காலம் என பல விஷயங் களையும் பார்த்துத் தானே அந்த பள்ளியில் பெற்றோர் சேர்க் கிறார்கள். 
பிறகு கட்டணம் பற்றி தனியாக பேசுவானேன் என்று கடைசியாக பிரச்னைக்கு முற்றுப் புள்ளியும் வைத்து விடுகிறார்கள்.
வக்கிரத்தின் உச்சம் - இந்த இளைஞர் செஞ்ச அருவருப்பான வேலை !
தமிழகத்தில் எடுத்துக் கொண்டால் தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு க்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்து அறிவிக்கத் தான் செய்கிறது. 

ஆனால் அதனை உண்மை யிலேயே பின்பற்றும் பள்ளிகளை ஒரு கையில் இருக்கும் விரல்களை விட்டே எண்ணி விடலாம். அப்போதும் சில விரல்கள் மிச்சமிருக்கும் என்கிறது உண்மை நிலவரம்.

தமிழக அரசு அறிவிக்கும் கட்டணத் துக்கும், பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத் துக்கும் மடுவுக்கும் மலைக்கும் இடை யிலான வித்தியாசம். 

இதனை அரசு கண்டு கொள்ளாதது ஏன்? என்றெல்லாம் நாம் கேட்பதேயில்லை. கேட்க வேண்டி யவர்களும் கேட்ப தில்லை.

பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை தொடங்கும் நேரம் இது. இந்த நேரத்தில் சமூக தளத்தில் ஒரு நண்பர் பெங்களூரு வில் இருக்கும் 
ஒரு புகழ்பெற்ற பள்ளியின் கட்டண விவரங்களை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட் டிருந்தார்.

அந்த விவரத்தில், எல்கேஜி மாணவரு க்கு ஆண்டுக் கட்டணம் ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் மட்டுமே என்கிறது பள்ளி நிர்வாகம். 
கர்ப்பிணிகள் எப்போது பயணம் செய்ய கூடாது? பாதுகாப்பு டிப்ஸ் !
இந்த தொகையை மாணவர் சேர்க்கை யின் போது பெற்றோர் செலுத்த வேண்டும்.

எல்கேஜி படிக்கும் ஒரு குழந்தைக்கு அப்படி 2 லட்சத்துக்கு என்ன தான் சொல்லிக் கொடுத்து விடுவார்கள். 

ஏ முதல் இசட் வரை மட்டும் தானே? அதற்கு டியூஷன் பீஸ் என்று 39 ஆயிரம் வசூலிக்கப் படுகிறது. 

அதுவே போதுமே என்று பெற்றோர் சொல்லலாம். பள்ளி நிர்வாகம் விடுவ தில்லையே.

இதர ஆக்டிவிடிஸ் கட்டணம் என்ற வகையில் ஒரு 8 ஆயிரமாம். ஐயா சாப்பிடவும், சிந்தாமல் தண்ணீர் குடிக்கவும் தெரியாத 3 

அல்லது இரண்டரை வயதுக் குழந்தைக்கு பள்ளி வேறு எதைத்தான் சொல்லிக் கொடுக்கும் இந்த கட்டணத்தில் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
விளையாட்டு, பராமரிப்பு, கம்ப்யூட்டர் சயின்ஸ் (எல்கேஜிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸா? என்ன கொடுமை), ஸ்மார்ட் க்ளாஸ் என பல ஆயிரங் களுக்கு நீள்கிறது ஒரு பட்டியல். 

இது எல்லாம் சரி.. ஸ்கூல் மேனேஜ்மென்ட் சாஃப்ட்வேர், கிறிஸ்துமஸ் பெல்லோஷிப் லஞ்ச் என்றெல்லாம் போட்டு 

சில ஆயிரங்களை வசூலிக்கும் இந்த பள்ளியின் மேனேஜ்மென்ட் தான் அந்த சாஃப்ட்வேர் பற்றி நமக்கு விளக்க வேண்டும்.
தொண்டை அடைப்பான் (Diphtheria) நோய் !
இப்படி, அப்படி என ஏ முதல் டபிள்யூ வரை ஒரு சிறிய(?!) பட்டியலின் மொத்தத் தொகை தான் ரூ.2,02,000 மட்டும். 

எல்கேஜிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் கட்டணம் !
அப்பாடா என்று மூச்சு விடும் போது, அந்த பட்டியலு க்குக் கீழே பொடி எழுத்தில் ஒன்று அச்சிடப் பட்டுள்ளது. 

அதைப் படித்த பின் சிலருக்கு வாந்தி, லேசான தலைச்சுற்றல் ஏற்படலாம். அதற்கு பள்ளி நிர்வாகமோ, 

செய்தியை வெளியிட்ட நாங்களோ பொறுப்பு அல்ல. உங்கள் ரத்தக் கொதிப்புத் தான் காரணமாக இருக்கும்.
மோடி தமிழின் பெருமையை பேசுவது ஏன்?
சரி என்ன சொல்லுங்கள் என்று அவசப் படாதீர்கள். சொல்கிறோம்.. பெற்றோர் வெளிநாட்டைச் சேர்ந்த வராகவோ 

அல்லது வெளி நாட்டில் வேலை செய்தாலே, அந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கு டியூஷன் கட்டணம் இரட்டிப்பாக வசூலிக்கப் படும். 
அதாவது 40 ஆயிரம் அல்ல, அவர்களு க்கு 80 ஆயிரம் டியூஷன் பீஸ். (இப்போது இந்த செய்தியில் முதல் பாராவை படித்தால் உங்களுக்கு நாங்கள் என்ன சொல்ல வந்தோம் என்பது புரிந்திருக்க லாம்)

கடவுளே இதை யெல்லாம் நீர் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறீரா? என்று கேட்டுக் கொண்டிருக் காதீர்கள். 

அப்புறம், அவர் பார்ப்பதற்கும் நம்மிடம் இருந்து சிறப்புக் கட்டணம் என்று கூறி சில லகரங்களை இந்த பள்ளிகள் வசூலித்து விடும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings