காவல் துறைத்தலைவர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற காவலர்கள் ரகு, கணேஷ் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வரும் ரகு, கணேஷ் என்ற இரு காவலர்கள் டி.ஜி.பி அலுவலக த்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.
அதன் பின்னர், வெளியே வந்த அவர்கள் திடீரென மண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. தேனி மாவட்ட த்தில் அவர்கள், `பணியாற்றும் இடத்தில் சாதி ரீதியாகப் பாகுபாடு காட்டப் படுகிறது.
மேலும், காரணம் இல்லாமல் பணியிட மாற்றம் செய்துள்ளனர்’ என்று குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், தற்கொலைக்கு முயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டு காவலர்கள் ரகு, கணேஷ் இருவரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, இருவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப் படும் என்று தேனி மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் தெரிவித் திருந்தது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments