ஜான்சி மருத்து மனையில் நோயாளியின் துண்டிக்கப் பட்ட காலையே தலை யணையாக்கிய மருத்துவமனை ஊழியர்களின் மனிதாபி மானமற்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவ மனைகளில் இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மறுப்பது, ஆதார் அட்டை இல்லை என்று கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு, மருத்துவமனை ஊழியர்களுக்கு லஞ்சம்
வழங்க மறுத்தால் அலட்சியமான கவனிப்பு போன்ற அவல காட்சிகள் நாள்தோறும் நடந்து வரும் சம்பவங்களைத் தொடர்ந்து
இப்போது ஜான்சி மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் நோயாளிக்கு தலையணைக்கு பதில் அறுவை சிகிச்சை செய்து அகற்றப் பட்ட காலையே தலையாணையாக வைத்துள்ள அவலம் நிகழ்ந் துள்ளது.
ஜான்சியின் மவுரின்பூர் பகுதியில் நேற்று சனிக்கிழமை தனியார் பள்ளி பேருந்து டிராக்டர் மோதாமல் இருப்பதற்காக பேருந்தை திருப்புகையில் சாலையில் வந்து கொண்டிருந்த ஒருவரர் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்தவர் அங்குள்ள மகாராணி லக்ஷ்மிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். விபத்தில் பாதிக்கப் பட்டவரின் இடது கால் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது.
நோய்த் தாக்குதலை தடுப்பதற்காக உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து அவருடைய இடது காலை மருத்துவர்கள் அகற்றினர்.
சிகிச்சை க்கு பின்னர் மற்றொரு பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.
அப்போது காய மடைந்த நபரின் தலையின் கீழ் தலையணை வைக்காமல் அறுவை சிகிச்சை செய்து அகற்றப் பட்ட அவருடைய துண்டிக்கப் பட்ட காலையே தலை யணையாக வைத்துள்ளனர்.
ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலேயே நடந்து அவலக் காட்சியை உள்ளூர் தொலைக் காட்சி ஒன்றில் ஒளிபரப்பப் பட்டுள்ளது.
இந்த அவலக் காட்சி பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி யையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இச்செய்தி வெளி யுலகிற்கு தெரிய வந்ததும் மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையின்
முதல்வர் சாத்னா கவுசிக், குற்றவாளி களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார்.
மேலும், பாதிக்கப் பட்ட நபருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. நோயாளின் தலைப் பகுதியை உயர்த்து வதற்கு மருத்துவர்கள் ஏதாவது கிடைக்குமா என பார்த்துள்ளனர்.
பின்னர் நோயாளியின் காலையே அதற்கு பயன் படுத்தப் பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்து வதற்கு குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.
இதில் எங்களுடைய பணி யாளர்கள் தவறு செய்திருந் தார்கள் என்றால் கடுமை யான நடவடி க்கையை எடுக்கப்படும் என தெரிவித் துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகார த்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையின் படி, மருத்துவ மனையின் இரு மருத்துவர்கள் மற்றும் பணி யாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பான முழுமையான விவரமும் கிடைக்கப் பெற்றதும் கடுமையான நடவடி க்கையை எடுக்கும் என மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறியுள்ளார்.
அறுவை சிகிச்சை அறையில் அகற்றப்பட்ட கால், அடுத்த வார்டு அறைக்கு அவர் மாற்றப்பட்ட பிறகு
எப்படி வந்தது என்ற கேள்விக்கு கல்லூரி முதல்வர் தெளிவான பதில் அளிப்பாரா என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.
Thanks for Your Comments