நான் வாங்கியதை நீ குடிப்பதா? தாயை அடித்தே கொன்ற மகன் !

0
வீட்டில் வாங்கி வைத்திருந்த மது பானத்தை தாய் எடுத்துக் குடித்ததால் ஆத்திர மடைந்த மகன், அவரைக் கொலை செய்துள்ளார்.
நான் வாங்கியதை நீ குடிப்பதா? தாயை அடித்தே கொன்ற மகன் !
சென்னை டி.பி.சத்திரம், சிமென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர், வெங்கடேசன். இவரது மனைவி கலாவதி. இவரது மூன்றாவது மகன், நீலகண்டன். 

வெங்கடேசன் இறந்து விட்டதால், தாயும் மகனும் ஒரே வீட்டில் குடியிருந்து வந்தனர். நீலகண்டன், பெயின்டர் வேலை செய்து வந்தார். நேற்றிரவு கலாவதி க்கும் நீலகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட் டுள்ளது. 

அவர்கள் இருவரு க்கும் இடையே அடிக்கடி தகராறு நடக்கும் என்பதால், பக்கத்து வீட்டினர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. தகராறு, கைகலப்பாக மாறியது. 

இதில் ஆத்திரமடைந்த நீலகண்டன், கலாவதியைக் கடுமை யாகத் தாக்கி யுள்ளார். இதில், அவர் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத் துக்குத் தகவல் கிடைத்ததும், உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். 
கலாவதி யின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், கலாவதிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. 

இதனால், சம்பவத் தன்று இரவில், நீலகண்டன் குடிப்பதற் காக வீட்டில் வாங்கி வைத்திருந்த மது பானத்தை எடுத்து கலாவதி குடித்துள்ளார். 

வீட்டுக்கு வந்ததும், மதுபாட்டில் காலியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார் நீலகண்டன். இது குறித்து கலாவதி யிடம் தகராறு செய்துள்ளார். 

அப்போது நடந்த தகராறில், கலாவதியைப் பிடித்து கழிவறை க்குள் தள்ளி யுள்ளார். ஏற்கெனவே போதை யில் இருந்த கலாவதி, விழுந்த இடத்தில் மயங்கிக் கிடந்துள்ளார். 

நீண்ட நேரத்து க்குப் பிறகு கலாவதியை சாப்பாடு போட்டுத் தரும்படி நீலகண்டன் எழுப்பி யுள்ளார். 
ஆனால் அவர் எழும்ப வில்லை. இதனால் ஆத்திர மடைந்த நீலகண்டன், மீண்டும் கலாவதியின் தலையை சுவரில் மோதியுள்ளார். அப்போது, கலாவதியின் தலையி லிருந்து ரத்தம் பீரிட்டுக் கொட்டியது. 

அதைப் பார்த்துப் பயந்த நீலகண்டன், ரத்தத்தைத் தண்ணீரால் சுத்தப் படுத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓட முயன் றுள்ளார். அதற்குள், நாங்கள் அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்து விட்டோம்" என்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings