உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் காரணம் தெரியுமா?

0
ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தது 2 லிட்டர் நீரைக் குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என முன்பு படித்திருப்பீர்கள். 
உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் காரணம் தெரியுமா?
ஒரு நாளில் ஒருவர் நீரை மட்டும் குடிப்ப தில்லை. அத்துடன் இதர பானங் களான காபி, டீ, ஜூஸ் என்று பல வற்றையும் குடிக்கிறோம். 

எனவே ஒருவர் ஒரு நாளைக்கு 6-8 முறை சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இல்லை. எப்போது ஒருவர் அளவுக்கு அதிகமான அளவில் பானத்தைக் குடிக்கி றார்களோ, அவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

சிறிய சிறுநீர்ப்பை

ஒவ்வொரு வரது உடலமைப்பும் வேறுபடும். எப்படி உயரம் மற்றும் உடல் எடையில் மாற்றம் உள்ளதோ, அதேப் போல் உள்ளுறுப் புக்களின் அளவும் ஒவ்வொரு வருக்கும் வேறுபடும். 

பொதுவாக ஒருவரது சிறு நீர்ப்பையில் 2 கப் சிறுநீர் சேரும். எப்போது சிறு நீர்ப்பை முழுமை யாக நிரம்பு கிறதோ, அப்போது தான் சிறுநீர் அவரசமாக வருவது போன்ற உணர்வு எழும். 
சிலருக்கு சிறு நீர்ப்பையில் 1-1.5 கப் சிறுநீர் தான் சேரும். இத்தகைய வர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். 

எனவே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சிறு நீர்ப்பையின் அளவும் ஓர் காரணமாகும்.

உடல் வறட்சி
அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு உடல் வறட்சியும் ஓர் காரணம் என்று கூறுவது சற்று ஆச்சரிய த்தை வழங்கலாம். எப்படி உடலில் போதிய நீர் இல்லாமல், சிறுநீர் உற்பத்தி யாகும் என்று பலரும் நினைக்க லாம். 

ஆனால் ஆய்வு ஒன்றில், உடலில் போதுமான அளவு நீர் இல்லாத போது, சிறுநீரின் அடர்த்தி அதிகமாகும். 

சிறுநீரின் அடர்த்தி அதிகம் இருக்கும் போது, அது சிறு நீர்ப்பையில் எரிச்சலை உண்டாக்கி, அவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வு எழும்.

சிறுநீரக கற்கள்

நீங்கள் தினமும் போதுமான அளவில் நீரைக் குடித்து, சர்க்கரை நோய் எதுவும் இல்லாமல் இருந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற் கான அறிகுறி யாக இருக்கலாம். 

அதிலும் ஒருவருக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிப்ப தோடு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடி முதுகு பகுதி 
மற்றும் இடுப்பு பகுதியில் வலி போன்ற வற்றையும் சந்திக்க நேரிடும். எனவே இம்மாதிரி யான அறிகுறிகள் தென் பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பலவீனமான இடுப்பு தசைகள்
இடுப்புப் பகுதியைச் சுற்றிய தசைகள் அல்லது அடி வயிற்றுப் பகுதி பலவீன மாக இருந்தால், அது சிறுநீரை அடக்க முடியாமல் செய்யும். 

இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் தான் சிறுநீர் கழிக்கும் போது சிறு நீர்ப்பையை சுருங்கச் செய்து, சிறுநீரை வெளியேற்று கிறது. 

இத்தகைய இடுப்பு தசைகள் போதிய வலிமை யுடன் இல்லா விட்டால், அதனால் சிறுநீரை அடக்க முடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். 

இதனைத் தவிர்ப்ப தற்கு இடுப்பு தசைகளை வலிமை யாக்கும் உடற் பயிற்சி களை செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட மருந்துகள்

நீங்கள் உயர் இரத்த அழுத்தம், சரும அலர்ஜி, மன இறுக்கம் போன்ற வற்றிற்கு மாத்திரை களை எடுப்பவர் களாயின், தற்காலிக மாக சிறு நீர்ப்பை பலவீனமாகி, அடிக்கடி சிறுநீரை கழிக்கச் செய்யும். 

ஆகவே இம்மாதிரி யான பிரச்சனைக்கு மருத்துவரை அணுகி, அவரிடம் உங்களது பிரச்சனையைக் கூறி, தீர்வை தெரிந்து கொள்ளுங்கள்.
அடிவயிற்றில் சிறுகட்டி
அடி வயிற்றுப் பகுதியில் சிறு கட்டிகளின் வளர்ச்சி இருந்தால், அதுவும் ஒருவரை அடிக்கடி சிறுநீரைக் கழிக்கச் செய்யும். 

ஏனெனில் இந்த கட்டிகள் சிறு நீர்ப்பையில் தொடர்ச்சி யாக அழுத்தம் கொடுக்கும் போது, அவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வு எழும். 

எனவே இந்த பிரச்சனைக்கு மருத்துவரை அணுகி ஸ்கேன் செய்து தான் தெரிந்து கொள்ள முடியும். எனவே நீண்ட நாட்களாக இப்பிரச்சனை இருப்பின் உடனே மருத்துவரை அணு குங்கள்.

தாழ் இரத்த அழுத்தம்

உங்களுக்கு இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தால், தலைச் சுற்றல், உடல் சோர்வு போன்ற வற்றுடன், அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் நேரிடும். 

எனவே உங்களுக்கு தாழ் இரத்த அழுத்தத் திற்கான அறிகுறிகள் தென் பட்டால், உடனே மருத்து வரை அணுகி, போதிய சிகிச்சையை தவறாமல் மேற்கொள் ளுங்கள்.
இறுதி மாதவிடாய்
45 வயதிற்கு மேல் ஆன பெண்களு க்கு இறுதி மாதவிடாய் காலம் நெருங்கும். இந்த காலத்தில் பெண்கள் அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வைப் பெறுவார்கள். 

இதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள ஹார்மோன் களில் ஏற்பட்ட திடீர் மாற்ற த்தால், சிறு நீர்ப்பையில் எரிச்சல் ஏற்பட்டு, அடிக்கடி சிறுநீரைக் கழிக்கச் செய்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings