அமில மழை ஏற்படுத்தும் பாதிப்புகள் !

0
அமிலமழை பெய்யும் என்பது உண்மையே. உலகின் பல பகுதிகளிலும் இந்நிகழ்வு நடை பெற்றுள்ளது. தூய்மையான நீரின் பிஎச்.மதிப்பு 7 ஆகும்.
அமில மழை ஏற்படுத்தும் பாதிப்புகள் !
7க்கு குறைவாக இருந்தால் அமிலத்தன்மை யோடும், 7க்கு அதிகமாக இருந்தால் காரத் தன்மையோடும் இருக்கும். 
ஆட்டோ ரன்னிங்கில் சக்கரத்தை மாற்றிய இளைஞர்கள் !
அமில மழைநீரில் கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் அதிகளவு கலந்திருக்கும். மோட்டார் வாகனங்கள், தொழிற் சாலைகளில் இருந்து வெளிப்படும் கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் சல்பைடு போன்றவையே அமில மழைக்கு முக்கிய காரணமாகும்.

இந்த வாயுவோடு மேகத்தில் உள்ள நீர்த்துளி வினைபுரிந்து கந்தக ட்ரை ஆக்சைடாக மாறுவதும் பின்னர் கந்தக அமிலமாக மாறுவதும் வேகமாக நடை பெறுகிறது. எனவே இந்த இடத்தில் பெய்யும் மழை அமில மழையாக பொழிகிறது. 

மும்பை செம்பூர் பகுதியில் பெய்த அமில மழையின் பிஎச்.மதிப்பு 3.5ஆக இருந்துள்ளது. இந்த அமில மழையின் நீர் மனிதனுக்கு நுரையீரல் சம்பந்த மான பல நோய்களை உருவாக்கும். 
கொத்து மல்லி பச்சடி செய்வது
உலோகக் குழாய்களில் தொடர்ந்து அனுப்பப்படும் நீரும் அமிலத் தன்மையோடு காணப்படும். 

இந்நீரை மனிதன் தொடர்ந்து பயன்படுத்தினால் சிறுநீரக பாதிப்புகள், எலும்பு பலவீனப்படுதல் போன்ற பாதிப்புகள் வரலாம். குழந்தைக ளுக்கு பேதி ஏற்படும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings