கடல்வாழ் உயிரினங் களின் பல் உயிர் பெருக்க த்துக்கு ஆதாரமாக விளங்கும் பாலிகீட்ஸ் (Polychaete) புழுக்கள் அபகரிக்கப் பட்டுக் கடத்தப் படுவதால் கடலோர நிலப்பகுதி களின் வளம் அழியும் நிலை உருவாகி யுள்ளது.
பாலிகீட்ஸ் புழுக்கள்
மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினைப் பகுதிகளின் கரையோரங் களில் மாங்குரோவ் செடிகள் நிறைந்த சதுப்பு நிலக் காடுகள் உள்ளன.
கடல் சீற்றங் களின் போது எழுந்து வரும் பெரும் அலைகளை இவை தடுப்பதால் இதனை அலையாத்திக் காடுகள் எனவும் அழைக் கிறார்கள்.
கடற் கரையோரப் பகுதிகளை கடல் அரிப்பிலிருந்து பாதுகாத்து வரும் இத்தகைய காடுகள் நிறைந்த பகுதியில் இருக்கும் சதுப்பு நிலங்களில் தான் ஓர் அதிசய உயிரினம் இருக்கிறது.
கடல்வாழ் உயிரினங் களின் பல் உயிர் பெருக்கத்துக்கு உதவி வரும் 'பாலிகீட்ஸ்' எனப்படும் மண் புழுக்கள் இங்கு நிறைந்து காணப்படு கின்றன.
இந்தப் புழுக்களை கடலின் சேற்று பகுதியில் வளரும் இறால் உள்ளிட்ட மீன் இனங்களும், சில பறவை இனங்களும் உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்து வருகின்றன.
மேலும் இவை சதுப்பு நிலப்பரப்பின் மண் வளத்தையும் பாதுகாத்து வருகின்றன.
இந்நிலை யில், பாம்பன் கடலோரக் கிராமப் பகுதிகளான சின்னப்பாலம், குந்துகால், தெற்குவாடி மற்றும் தொண்டி ஆகிய இடங்களில் அதிக அளவில் காணப்படும்
இந்த பாலிகீட்ஸ் புழுக்களைச் சட்டத்திற்குப் புறம்பாகச் சேகரித்து வெளி மாவட்டங் களுக்கு எடுத்துச் செல்லும் செயலில் சிலர் ஈடுபட்டு வரு கின்றனர்.
பாண்டிச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதியி லிருந்து இங்கு வரும் வியாபாரிகள் சிலர் சின்னப்பாலம்
பகுதியைச் சேர்ந்த சிலரின் துணையுடன் பாலிகீட்ஸ் புழுக்களை தோண்டி எடுத்து விற்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலோர பகுதி
இதற்கென சின்னப்பாலம் கடலோரப் பகுதியில் முகாமிட்டுள்ள இவர்கள் நாள் தோறும் காலை முதல் மாலை வரை
சிறிய மண் வெட்டிகள் மூலம் இந்தப் புழுக்களை உயிருடன் சேகரித்து வருகின்றனர்.
கடற்கரை யோரச் சதுப்பு நில மணல் பகுதியில் நிறைந் திருக்கும் பாலிகீட்ஸ் புழுக்களை உயிருடன் தோண்டி எடுத்து பிளாஸ்டிக் கேன்களில் எடுத்துச் செல்கின்றனர்.
இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் புழுக்கள் வெளி மாவட்டங் களில் வளர்க்கப் படும் பண்ணை இறால் களுக்கு உணவாக விற்பனை செய்யப்படு கின்றன.
சதுப்பு நிலப்பரப்பில் உள்ள பாலிகீட்ஸ் புழுக்களை எடுப்பது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி குற்றம் இல்லை என்றாலும்
கடலோரப் பகுதிகளில் உள்ள அவற்றின் வாழ் விடங்களைச் சேதப் படுத்துவது குற்றத்துக்கு உரிய செயலாகும்.
மேலும், கடற்கரை வளத்தினையும் கடல்வாழ் உயிரினங் களின் வளர்ச்சியை யும் பாதுகாக்கக் கூடிய
இத்தகைய பாலிகீட்ஸ் புழுக்களை மீனவர்களின் அறியாமையைப் பயன் படுத்திக் கொண்டு சட்ட விரோதமாக அபகரித்துச் செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன்,
இப்புழுக் களின் அவசியம் குறித்து மீனவர் களிடையே விழிப்பு உணர்வினை ஏற்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய வன உயிரினப் பாதுகாப்பு அலுவலர், ''கடற்கரை யிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்கு எந்த விதமான நடவடி க்கைகளும் மேற் கொள்ளக் கூடாது எனத் தடை உள்ளது.
இந்நிலையில் பாலிகீட்ஸ் புழுக்களைச் சேகரிப்பதன் மூலம் அவற்றின் வாழ் விடங்கள் சேதத்திற் குள்ளாவதுடன்,
கரை யோரங்களில் வாழும் நண்டு உள்ளிட்ட உயிரினங் களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப் புள்ளது.
இதனைத் தடுக்கும் வகையில் புழு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள வர்களை எச்சரிக்கை செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றார்.
Thanks for Your Comments