விமான நிலையத்தில் சிதறிக்கிடந்த தங்கக் கட்டிகள் !

0
மதுரை விமான நிலைய நடை மேடையில், 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து தங்கக் கட்டிகள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 
விமான நிலையத்தில் சிதறிக்கிடந்த தங்கக் கட்டிகள் !
நேற்று மாலை இதைக் கண்டு பிடித்த சுங்கத் துறையினர், கடத்தல் காரர்களைத் தேடி வரு கிறார்கள்.

இலங்கை யிலிருந்து மதுரை வந்த விமானத்தில் தங்கம் கடத்தப் படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து உஷாரான சுங்க புலனாய்வுத் துறையினர், 

வந்திறங்கிய பயணிகளைச் சோதித்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. அதன்பிறகு, விமானத்தில் சோதனை செய்தும் எதுவும் சிக்க வில்லை. 

இந்த நிலையில் தான், விமானத்தி லிருந்து நிலையத்தை இணைக்கும் நடைமேடையில் ஐந்து தங்கக் கட்டிகள் சிதறிக் கிடந்ததைக் கண்டெ டுத்தனர். இதன் மதிப்பு, 31 லட்சம் என்று சொல்லப் படுகிறது.

தங்க விமான நிலையம் என்று சொல்லு மளவுக்கு மதுரை விமான நிலைய த்தில் தினம் தோறும் தங்கக் கடத்தலைக் கண்டு பிடித்து வருகிறார்கள். 
தமிழகத்தி லுள்ள விமான நிலையங் களில், சமீப காலமாக மதுரையில் தான் அதிகமாக தங்கக் கடத்தல் நடை பெறுகிறது. 

அதிலும், கடத்தல் காரர்களின் டெக்னிக்கு களைப் பார்க்கும் போது, தனியாக புத்தகமே எழுதலாம். அந்த அளவுக்கு புதுப்புது முயற்சி களை எடுத்து, கடைசியில் மாட்டிக் கொள்கி றார்கள்.

துபாய், சிங்கப்பூர், இலங்கை யிலிருந்து மதுரைக்கு விமானங்கள் இயக்கப் படுகின்றன. வெளிநாட்டு விமானங்கள் வரத் தொடங்கிய பின், அதிகமான அளவில் தங்கக் கடத்தலும் நடை பெறுகிறது. 

'ஆதவன்' பட ஸ்டைலில் தங்கத்தை விழுங்கி யும், பெல்ட், சூட்கேஸ் கைப்பிடி, ஷூ-க்குள் வைத்தும், இன்னும் சிலபேர் எலெக்ட்ரானிக் பொருள் களுக்குள் மறைத்தும், 

ஷேவிங் பிளேடு போல ஆக்கியும், வெள்ளை பெயின்ட் அடித்தும், பவுடராகவும் பல யுக்தி களைக் கையாண்டு, கடைசியில் சுங்கத் துறையி னரிடம் மாட்டிக் கொள்கி றார்கள். 
தங்கம் கடத்து பவர்கள் அனைவரும் கூலிக்காகச் சென்ற வர்கள் என்று சொல்லப் படுகிறது. கடத்தலு க்குக் காரணமான முக்கியப் புள்ளிகள் தப்பி விடுகிறார்கள். 

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 10 கிலோ தங்கம் பிடிக்கப் பட்டுள்ளது. எவ்வளவு தான் பிடித்தாலும், கடத்தல் காரர்கள் மனம் தளராமல் தொடர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக் கிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings