இமயமலையில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி மீது வைக்கப்படும் விமர்சனங்களைக் காணலாம். கடந்த 30 ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி வந்தவர் ரஜினிகாந்த்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் சிஸ்டம் சரி யில்லை என்று அதிரடியைத் தொடங்கினார்.
அதே ஆண்டு இறுதியில் தான் புதுக்கட்சி தொடங்கி, தனித்து போட்டி யிடுவதாக அறிவித்தார். இதற்காக உறுப்பினர்கள் சேர்க்கையை முடுக்கி விட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழர் களுக்கு நல்லது செய்யப் போகிறேன் என்று கூறி விட்டு, இமய மலையில் ரஜினி ஆன்மீகச் சுற்றுப் பயணம் மேற்கொண் டுள்ளார்.
அப்போது அரசியல் தொடர்பாக எந்தவித கருத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.ஆனால் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள குரங்கணி தீவிபத்து, நாட்டையே உலுக்கி உள்ளது.
இந்த சம்பவத் திற்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக் காதது, தமிழர் களிடையே ஏமாற்ற த்தை அளித்துள்ளது. மக்கள் பிரச்சனை களுக்கு, களத்தில் இறங்கி போராடிய எத்தனையோ இயக்கத் தார் உள்ளனர்.
அவர்கள் நித்தம், நித்தம் மக்களைப் பற்றியே சிந்தித்து வருகின்றனர். ஆனால் சிலர் திரைத் துறையில் இருந்து வருகிறேன் என்ற பெயரில், ஏசி அறையில் இருந்து கொண்டால் மக்கள் பிரச்சனைகள் எப்படி தெரியும்.
அதுவும் தமிழர்களை முன்னேற்றப் போகிறேன், தமிழகத்தை முன்னு தாரணமாக்கப் போகிறேன் என்று கூறி விட்டு, இமயத்தில் ஆன்மீகப் பயணம் செய்தால் என்ன நன்மைகள் விளையும் என்று தெரிய வில்லை.
இவர்கள் ஒட்டு மொத்த மக்களை முட்டாளாக்கு கிறார்களா? என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
Thanks for Your Comments