அரசியலுக்கு வந்து விட்டேன்... சகாயம் !

0
நான் ஊழலை எதிர்த்த அன்றே அரசியலுக்கு வந்து விட்டேன் என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்தார்.
அரசியலுக்கு வந்து விட்டேன்... சகாயம் !
கருங்கல் (கிரானைட்) மற்றும் கனிம மணற் கொள்ளை பற்றி விசாரிக்க சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம். 

மதுரை மாவட்ட த்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் குழு விசாரணை நடத்திய போது, நரபலி கொடுக்கப் பட்டதாக புகார் எழுந்தது. 

நரபலி கொடுத்த சுடுகாட்டில் சடலத்தை தோண்டி எடுக்க போலீசார் ஒத்துழைக்க வில்லை. இரவு நேரம் எனக் கூறி போலீசார் அலைக் கழித்தனர். 

எனினும் அசராத சகாயம் குழுவினர் இரவு எத்தனை மணி நேரமான லும், புகாரில் குறிப்பிட்ட இடத்தை தோண்டி எடுத்து 

உடலை ஆய்வு செய்த பிறகே இங்கிருந்து செல்வோம் எனக் கூறி சுடு காட்டிலேயே முகாமிட்டு தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் தனக்கு சுடுகாட்டில் படுக்க பயமில்லை. ஆனால் சுதந்திர நாட்டில் இருக்கத்தான் பயமாக இருக்கிறது என்றார். 
 
கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டி யிடுவார் என்று தகவல்கள் பரவிய நிலையில் தற்போது அரசியலுக்கு குறித்து அவர் கருத்து கூறியுள்ளார். அதில் ஊழலை எதிர்த்த அன்றே அரசியலுக்கு வந்து விட்டேன். 
 
நான் அரசியலுக்கு வந்துள்ளதை சமூகம் உறுதி செய்யும் வணிகம் செய்பவர்கள் சூழ்ச்சி கொண்ட வர்கள் ; அவர்கள் தான் ஆள்கிறார்கள் என்றார் சகாயம் ஐஏஎஸ்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings