என் மனைவியைப் பறிச்சிட்டாங்க... சூலமங்கலம் ராஜா !

0
பைக்கில் செல்பவர்களை டிராஃபிக் போலீஸார் துரத்திச் செல்வதும், அதனால் பாதிப்புகள் நிகழ்வதும் தொடர் கதையாகி வருகிறது. 
என் மனைவியைப் பறிச்சிட்டாங்க... சூலமங்கலம் ராஜா !
சமீபத்தில் திருச்சியில் நிகழ்ந்த துயரச் சம்பவங்களில் சில...

திருச்சி - வயலூர் சாலையில் சந்தோஷ் குமார், பாலசந்திரன் என்ற இரு இளைஞர்கள் பைக்கில் சென்ற போது, அவர்கள் மீது டிராஃபிக் போலீஸார் தாக்குதல் நடத்தினர்.

திருச்சி காஜாபேட்டை பகுதியில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இரு இளைஞர்களை போலீஸார் விரட்டிச் சென்றனர்.

போலீஸுக்குப் பயந்து வேகமாக பைக்கை ஓட்டிய அவர்கள், ஒரு பெண்மீது மோதினர். அதில், அந்தப் பெண் உயிரிழந்தார்.

அம்மா மண்டபம், காவிரி பாலம் அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த மாணவர்கள் இருவரை, 
போலீஸார் துரத்திச் சென்றனர். தடுப்புச் சுவரில் பைக் மோதி, மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இப்போது, போலீஸாரின் இதே போன்ற ஒரு அணுகு முறையால் கர்ப்பிணி உஷா உயிரிழந்துள்ளார். 

இந்தச் சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யதுடன், போலீஸாரு க்கு எதிரான கொந்தளி ப்பையும் உருவாக்கி யுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. தனியார் வங்கியில் பணியாற்றி வரும் இவர், 

ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மனைவி யுடன் சென்ற போது, அந்தத் துயரம் நிகழ்ந்தது.

பெரும் துயரத்தில் இருந்த ராஜா, நடந்த சம்பவங் களைக் கண்ணீருடன் விவரித்தார். “எங்க நண்பரு க்குத் திருச்சியில நிச்சய தார்த்தம். 

பரிசு கொடுக்க ஒரு சின்ன கிரைண்டரை வாங்கிட்டு, நானும் உஷாவும் பைக்ல போனோம். துவாக்குடி டோல் பிளாசா பக்கத்துல போலீஸ் காரங்க எங்களை மறிச்சாங்க. 
நான், பைக்கை ஓரமாக நிறுத்தப் போனேன். அதுக்குள்ளே ஒரு போலீஸ்காரர், என் சட்டையை யும் கிரைண் டரையும் பிடிச்சு இழுத்தார். 

‘ஏன் சார், நாங்க என்ன குற்ற வாளிகளா? இப்படி இழுக்குறீங்க?’ னு கேட்டேன். கால் மணி நேரம் அங்கேயே நின்னோம். அவங்க எதுவும் சொல்லலை. 

அதனால, அங்கிருந்து கிளம்பி அஞ்சு கிலோ மீட்டர் வந்திருப்போம். அப்போ, பின்னால போலீஸ் துரத்திக் கிட்டு வர்றதா என் மனைவி சொன்னா. 

இன்ஸ்பெக்டர் காமராஜ் வேகமாக வந்து என் மனைவி யின் காலில் எட்டி உதைச்சார். கீழே விழுந்ததுல, ரெண்டு பேருக்கும் பலத்த அடி. அவ தலை யிலருந்து ரத்தம் கொட்டுச்சு. 

அக்கம் பக்கத்தில் இருந்தவங்க, ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவெச்சாங்க. துவாக்குடி ஆஸ்பத்திரி க்குப் போன கொஞ்ச நேரத்துல உஷா இறந்துட்டா. 

சந்தோஷமா பேசிக்கிட்டு வந்த என் உஷாவைக் கொஞ்ச நேரத்தில இப்படி பறிச்சிட் டாங்க பாவிங்க...” எனக் கதறினார்.

உஷாவின் தாய் லூர்துமேரி, “கல்யாண மாகி பல வருஷங்களா உஷாவுக்குக் குழந்தை இல்லை. வேண்டாத சாமியில்லை. 

போகாத கோயில் இல்லை. இப்போ, உஷா மூணு மாத கர்ப்பமா இருந்தா. இந்த நேரத்துல இப்படிக் கொலை பண்ணிட் டாங்களே” என்று கதறினார்.
‘இனி இப்படித் துரத்த வேண்டாம்’ எனப் போலீஸாரு க்குத் தமிழக அரசு உத்தரவு போடுவதற்கு உஷா தன் உயிரைக் கொடுக்க வேண்டி யிருக்கிறது! 

- சி.ய.ஆனந்தகுமார்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings