அரியலூர்: நேரம் வரும் போது நானும் ஆட்சிக்கு வருவேன் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் சரத்குமார் கதா நாயகனாக நடிக்கு பாம்பன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு அவர் செய்தி யாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது. தத்தளிக்கும் கப்பலை சீரமைத்து கொண்டு வருவதற்கு எனது பாராட்டுகள்.
ஓய்வு பெற்ற நிலையில்
நான் அரசியலில் 21 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். மற்றவர் களை போல் ஓய்வு பெற்று ஓய்ந்து போன நிலையில் நான் வர வில்லை.
ஆட்சி கட்டிலில்
கமலுடன் நான் ஏன் கூட்டணி வைக்க வேண்டும், அவர்தான் என்னுடன் வந்து கூட்டணி வைக்க வேண்டும். நேரம் வரும் போது நானும் ஆட்சி கட்டிலில் அமர்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
சரத்குமார் தேர்தலில் போட்டி அதிமுக கூட்டணி
கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தென்காசி யில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட சரத்குமார் வெற்றி பெற்றார்.
ஆனால் கடந்த 2016-இல் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டி யிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத் தக்கது.
ரஜினி,கமல் கடும் விமர்சனம்
அரசியலுக்கு வரும் ரஜினி, கமல் ஆகியோரை சரத்குமார் கடுமை யாக விமர்சனம் செய்து வருகிறார். காவிரி விவகார த்தில் ரஜினி என்ன செய்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பி யிருந்தது குறிப்பிடத் தக்கது
Thanks for Your Comments