தமிழகத்தை உலுக்கிய சம்பவம்... சிறுவன் கொலை !

0
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விழுப்புரம் சிறுவன் கொலை வழக்கு, தாய், சகோதரி தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தை உலுக்கிய சம்பவம்... சிறுவன் கொலை !
பிப்ரவரி மாதம் 21-ம் தேதி இரவு விழுப்புரம், வெள்ளம் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி என்பவர் தனது 10 வயது மகன் சமயன் 

மற்றும் 14 வயது மகள் தனத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் ஆராயி 

மற்றும் அவரது மகள் மீது பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது அவரது மகன் சமயன் தாக்கி கொல்லப் பட்டார்.

மர்ம நபர்கள் மூன்று பேரையும் கொடூரமாகத் தாக்கியதோடு 10 வயது சிறுவன் சமயனை யும் மிதித்துக் கொன்றனர். 

சிறுமி தனத்தையும் பாலியல் வன்கொடுமை செய்தனர். ஆராயி மற்றும் அவரது மகள் கடுமை யாக தாக்கப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதில் பல நாட்களுக்கு பின்னரே இருவரும் உயிருக்கு போராடி சுய நினைவு க்கு வந்தனர்.

தமிழக த்தை உலுக்கிய இந்த வழக்கில் தேசிய தாழ்த்தப் பாட்டோர் ஆணையமே நேரடியாக வந்து விசாரணை நடத்தியது. 

இந்த வழக்கில் கடந்த ஒருமாதமாக போலீஸார் குற்றவாளி களை தீவிரமாகத் தேடி வந்த நிலையில் நேற்று இரண்டு பேர் சிக்கி யுள்ளனர்.

கடலூர் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்த தில்லை நாதன், அம்பிகா என்ற இரண்டு பேரை கைது செய்துள்ளனர். 

தில்லைநாதனின் வேலையே இரவில் தனியாக திரிவதும் தனிமையில் இருப்ப வர்கள் யாராக இருந்தாலும் தாக்கி கொடூரமாக கொள்ளை அடிப்பதே வாடிக்கை யாக இருந்துள்ளார். 
கடந்த பிப்ரவரி 21-ம் தேதி இரவும் தில்லைநாதன் அங்கு இருந்தது தெரிய வந்துள்ளது. உடனடி யாக தில்லை நாதனை போலீஸார் கைது செய்தனர்.

தில்லை நாதனிடம் நடத்திய விசாரணை யில், தனம், ஆராயி, சமயன் ஆகியோர் வீட்டில் தனியாக இருப்பதைப் பார்த்து வீட்டு க்குள் புகுந்த அவர்களைத் தாக்கி நகைகளை பறித்துள்ளது தெரிய வந்தது. 

மேலும், சிறுமி தனத்தை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது குறுக்கே வந்த சிறுவன் சமயனை மிதித்தே கொன்றதும் தெரிய வந்துள்ளது.

பின்னர் தனமும், ஆராயியும் சத்தம் போட்ட தால் இருவரை யும் கடுமை யாக தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார். 

தில்லை நாதன் மீது விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்ட த்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. 
தில்லை நாதன் திருடி வரும் நகைகளை விற்றுக் கொடுப்பது, அதைப் பாதுகாக்கும் வேலையை செய்து வந்த அம்பிகாவை போலீஸார் கைது செய்து ள்ளனர். 

இந்தக் கொலை யில் தில்லை நாதன் மட்டும் ஈடுபட்ட தாக போலீஸார் கருத வில்லை, ஆகவே உடனிருந்தது யார் என்றும் விசாரணை நடத்தி வருகின் றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings