சென்னை மீனம் பாக்கத்தில் காமராஜர் உள்நாட்டு முனையம் மற்றும் அண்ணா பன்னாட்டு முனையம் என்ற பெயர்களில் விமான நிலையம் செயல் பட்டு வந்தது.
விமான நிலைய த்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரி த்து வருவதால் கடந்த 2012-ம் ஆண்டு புதியதாக தனித்தனி வருகை,
புறப்பாடு பகுதிகளுடன் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனை யங்கள் ஏற்படுத்தப் பட்டன.
உள்நாட்டு முனைய த்தில் உள்ள வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளும், பன்னாட்டு முனைய த்தில் உள்ள புறப்பாடு பகுதி மட்டுமே செயல்பட தொடங் கியது.
ஆனால் பன்னாட்டு முனைய வருகை பகுதி மட்டும் இன்னும் அண்ணா பன்னாட்டு முனைய கட்டிட த்தில் செயல்பட்டு வருகிறது.
காமராஜர் உள்நாட்டு முனைய கட்டிடத்தில் மத்திய தொழிற்படை ஓய்வறை மற்றும் உணவ கங்கள் செயல்பட்டு வந்தன.
இந்த நிலையில் காமராஜர் உள்நாட்டு முனைய கட்டிடம், அண்ணா பன்னாட்டு முனைய கட்டிடம் ஆகிய வற்றை இடித்து அந்த இடத்தை பன்னாட்டு
மற்றும் உள்நாட்டு முனையங் களுக்கான கூடுதல் முனை யங்களாக விரிவு படுத்த முடிவு செய்யப் பட்டது. இதற்காக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து காமராஜர் உள்நாட்டு முனைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த மத்திய தொழிற்படை ஓய்வறை, உணவகம் ஆகியவை வேறு பகுதி களுக்கு மாற்றப் பட்டன.
அதை தொடர்ந்து காமராஜர் உள்நாட்டு முனைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கியது.
பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப் படும். அந்த பணி முடி வடைந்த உடன் அண்ணா பன்னாட்டு முனைய கட்டிடமும் இடிக்கப்பட்டு
அங்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். அதன்பிறகு பன்னாட்டு, உள்நாட்டு முனையங்கள் விரிவு படுத்தப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவி த்தனர்.
Thanks for Your Comments