காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகள்... களமிறங்கிய விமானப்படை !

0
தேனியை அடுத்த குரங்கணி மலைப்பகுதி காட்டுத் தீயில் சிக்கியுள்ள மாணவிகளை மீட்க இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகள்... களமிறங்கிய விமானப்படை !
தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப் பகுதியில் நேற்று இரவு முதல் காட்டுத் தீ பற்றி யெரிந்து வருகிறது. இதனால், மலைப் பகுதியில் பல நூறு ஏக்கரிலான மரங்கள் எரிந்து நாசமாகின. 

இந்த நிலையில், குரங்கணி மலைப் பகுதிக்கு மலையேற்றப் பயிற்சிக் காகக் கல்லூரி மாணவிகள் 27 பேர் சென்றுள்ளனர். 

காட்டுத் தீயில் அவர்கள் சிக்கிக் கொண்டதாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் கிடைத்தது. 

இதை யடுத்து அவர்களை மீட்கும் பணியில் வனத்துறை, காவல் துறை மற்றும் பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். 
காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதால் மாணவிகளை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ள தாகக் கூறப் படுகிறது. 

சம்பவ இடத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், எஸ். பி. பாஸ்கரன் உள்ளிட்டோர் விரைந் துள்ளனர்.

இந்தநிலை யில், காட்டுத் தீயில் சிக்கியுள்ள மாணவி களை மீட்க உரிய நடவடிக்கை களை எடுக்குமாறு 

தேனி மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். 

தேனி மாவட்ட ஆட்சியாளருடன் சற்று முன் தொலைபேசி மூலம் பேசினேன். 10-15 மாணவர்கள் மலையிலின் அடிவாரத்திற்கு இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். 
 
தீயணைப்பு படை மற்றும் வனத்துறை அதிகாரிகளும் தீவிர முயற்சி எடுத்துவருகின்றனர்.@CMOTamilNadu @pibchennai @ThanthiTV @gennowmedia #குரங்கணிதீ
மேலும், அவர்களை மீட்கும் பணியில் விமானப்படையை ஈடுபடுத்த வேண்டும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமியின் கோரிக்கையை ஏற்று 

மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி செயல்பட விமானப் படைக்கு உத்தர விட்டுள்ள தாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித் துள்ளார். 

இதையடுத்து மாணவிகளை மீட்கும் பணியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings