உண்மை காதலை நிரூபித்த காதல் ஜோடி !

0
இந்த காலத்து பசங்ககிட்ட உண்மையான காதலையே பார்க்க முடியலப்பா என்ற வசனம் பெரும்பாலான இடங்களில் கேட்டிருப்போம்.
உண்மை காதலை நிரூபித்த காதல் ஜோடி !
குறிப்பாக பெண்கள் இதில் அதிகமாக வசை வாங்கு பவர்களாக இருக்கி றார்கள். பெண்கள் பணத்திற்கு தான் வருவார்கள், 

நம்மிடம் பணமில்லை என்று தெரிந்தால் போதும் உடனேயே நம்மை ப்ரேக் அப் செய்து விடுவார்கள் என்கிற பேச்சு எப்போதும் கடந்து வந்திரு ப்போம், 

ஆனால் இந்த கூற்றை யெல்லாம் தவிடு பொடியாக்கி உண்மைக் காதல் என்றால் என்ன என்பதை நிரூபித்து வாழ்ந்து காட்டிக் கொண்டிருக் கிறார்கள் ஒரு காதல் தம்பதிகள்!

#1 . தாய்லாந்தை சேர்ந்த இருபத்தியோரு வயதான பூஹ் சோக்சாய் என்ற நபருக்கு கண்களில் புற்று நோய் அதுவும் லாஸ்ட் ஸ்டேஜ். கண்களில் ஏற்பட்ட புற்று நோய் மெல்ல பரவி முகம் முழுவதும் பரவியிருக் கிறது.

உறவுகளே அருகில் வர தயங்கக் கூடிய இந்த சூழலில் இவரது காதலி முழுவதும் உடனிருந்து கவனித்துக் கொண்டிருக் கிறார்.

#2 . பூஹ்ஹின் காதலி அடிடயா சும்கியூ தன் காதலனுடன் எடுத்த புகைப் படங்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்து மூன்றாம் ஆண்டு காதல் இன்றும் காதல் குறையாமல் இருக்கிறது என்று பகிர்ந் திருந்தார்.

#3 . அது பயங்கர வைரலாய் சமூக வலை தளங்களில் பரவியது. கண்களில் ஏற்பட்டி ருக்கும் புற்றுநோய் சரி செய்ய முடியாது, அதிலும் உயிரைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள் 
ஆனாலும் ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து என் புஹ் உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கை யுடன் காத்திருக் கிறார் அடிடயா.

#4 . மூன்று வருடங் களுக்கு முன்னர் புஹ்ஹை பார்த்த போது எப்படி காதல் வயப் பட்டேனோ அதே போலத்தான் இன்றும் அவன் மீது காதலுடன் இருக்கிறேன், 

அவனது உருவம் எல்லாம் எனக்கு பெரிதாக தெரிய வில்லை. அவனை நான் மனதார நேசிக்கிறேன் அவ்வளவு தான் என்கிறார்

#5 . இரண்டு வருடங் களுக்கு முன்னர் புஹ் கண்களில் ரெடினோ ப்ளாஸ்டோமா எனப்படுகிற ஒரு வகை புற்று நோய் ஏற்பட்டி ருப்பது கண்டறியப் பட்டது. 

உடனடியாக சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டன, இரண்டு முறை கீமோதெரபி கொடுக்கப் பட்டது.

#6 . ஆனாலும், கண்களைத் தாண்டி முகம் முழுவதும் புற்றுநோய் பரவுவதை தடுக்க முடிய வில்லை.... புற்றுநோய் பரவுவதை தடுக்க முடியாது. 

கூடிய விரைவில் புஹ் மரணத்தை தழுவார் என்று உறுதியாக தெரிந்த பின்பு அவர் மேல் இன்னும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன் என்கிறார் அடிடயா.

#7 . எங்களை எல்லாரும் வித்யாச மாக பார்க்கி றார்கள் அதான் அதற்காக நாங்கள் வருத்தப்பட வேண்டும் என்றோ கவலைப் பட்டுக் கொண்டு உட்கார்ந் திருக்க வேண்டு மென்றோ அவசிய மில்லை.
#8 . இது எங்களின் வாழ்க்கை, எங்கள் காதல் வாழ்க்கையை இன்னும் அழகாக்க எங்கள் நாட்களை இனிமை யாக்க முடிந்த வரை முயல் கிறோம், 

பூஹ்ஹின் வாழ்நாள் எண்ணப் பட்டுக் கொண்டிருக் கிறது தெரியும், அவனது இறுதி மூச்சு இருக்கிற வரை அவனை மகிழ்வாக வைத்திருக்க வேண்டும்.

#9 . மருத்து வர்களே கை விரித்து விட்ட நிலையில் தன்னுடைய குறை பாட்டினை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வலியை வெளி காட்டாது, அன்புக் காதலி அடிடயா போட்டோ எடுக்கும் போது மகிழ்வாக போஸ் கொடுக்கிறார் பூஹ்.

இவர்கள் தங்கள் சமூக வலை தளத்தில் பகிரும் புகைப் படங்களுக்கு எல்லாரும் பாசிட்டிவ் கமெண்டஸ் கொடுத்து 

புஹ் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும் இவர்களது காதல் ஜெயிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக் கிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings