ஆர்.கே.நகர் MLA-வான டிடிவி தினகரன் தனது அமைப்பின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என அறிவித் துள்ளார்.
மேலும் அமைப்பிற் கான புதிய கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.
அவர் திரும்ப திரும்ப தனது பேட்டிகளின் போதும் சரி, செய்தி யாளர்கள் அரசியல் கட்சி என்று கூறிய
போதும் தவறு இது அரசியல் கட்சியல்ல, அரசியல் அமைப்பு என அழுத்தம் திருத்தமாக கூறி வருகிறார்.
அவர் இன்று துவக்கி யுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தையும் புதிய அமைப்பு என்று தான் அறிமுகம் செய்துள்ளார்.
இதை மையமாக வைத்து தேர்தல்களில் வெற்றி பெற்று அதிமுக கட்சி மற்றும் சின்னத்தை கைப்பற்று வோம் என சூளுரைத்தார்.
தினகரன் ஏன் தனிக்கட்சி என பிரகடனப் படத்தாமல் அரசியல் அமைப்பு என அறிவித் துள்ளார் என்பதை கூர்ந்து கவனித்தால் புரியும்
ஒரு வேளை எதிர் காலத்தில் அதிமுக- வை கைப்பற்றும் சூழல் வந்தால், அப்போது சிக்கல் ஏதும் வந்து விட கூடாது
என்பதற் காகவே கட்சியை துவக்காமல் அமைப் பாகவே துவக்கி யுள்ளார் என்பது.
தனி கட்சியை துவக்கினால் அது எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்புக்கு தான் சாதகமாக முடியும் என்பது தினகரனுக்கு நன்றாகவே தெரியும்.
மேலும் தனி கட்சி துவக்கப் பட்டால் சசிகலா வால் நியமிக்கப் பட்ட அதிமுக துணை பொதுச் செயலாளர் என்ற பதவி பறிபோய் விடும்.
அப்படி நிகழ்ந்தால் அதிமுக என்ற மாபெரும் அமைப்பை கைப்பற்றுவது எட்டாக் கனியாகி விடும்.
மேலும் 18 MLA-க்கள் தகுதிநீக்க வழக்கும் எடப்பாடி அணிக்கு சாதக மாகவே முடிந்து விடும்.
இதெல்லாம் தெரிந்து தான் தனி கட்சியை தினகரன் துவக்கினால் அதில் இணைய மாட்டோம் என அவரின் தீவிர ஆதரவாளர் களில் ஒருவரும்,
தகுதி நீக்கம் செய்யப் பட்டுள்ள MLA-வுமான தங்கத் தமிழ்செல்வன் ஒரு பேட்டியின் போது கூறி யிருந்தார்.
எனவே தான் அதிமுக-வை கைப்பற்றும் விவகாரத்தில் எதிரணியி னரின் கை ஓங்கி விட அனுமதிக்க கூடாது என்பதில் கவனமாக உள்ள
டிடிவி தனி அமைப்பு என்று அழுத்தம் திருத்தமாக திரும்ப திரும்ப சொல்லி வருகிறார் என்பது அரசியல் விமர்சகர் களின் பார்வை யாக உள்ளது.
Thanks for Your Comments