படித்தது என்னவோ பொறியியலாக இருந்தாலும், நான் வேலை செய்து வருவது ஒரு ட்ரான்ஸ்போர்ட் கம்பெனியில் சூப்பர் வைசராக.
சொந்த வீடு, வாகனம் இருப்பினும் நான் ஒரு மிடில் கிளாஸ் மாதவன். ஒவ்வொரு முறை ஜி.எஸ்.டி, வரி அதிகரிப்பு, பெட்ரோல்
விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு அறிவிப்பு வரும் போதெல்லாம், எனது இரத்த கொதிப்பும் உயர்வடையும்.
இது நான் என் வாழ்வில் கடந்து வந்த ஒரு முக்கிய மான பாதை.... நான், என் மனைவி, இரண்டு மகள்கள், ஒரு கடைக்குட்டி மகன் என ஒரு சிறிய குடும்பம் என்னுடையது.
அப்பா இறந்து வெகு காலம் ஆகி விட்டது. அம்மா படுக்கை யில் உயிர் வாழ்ந்து வருகிறார். என் மனைவி கிராமத்தை சேர்ந்தவள்.
திருமணமாகி என் ஊருக்கு வந்த போது அவளை கண்டதும் பட்டிக்காடு என்று கூறி விடலாம், அப்படி தான் பேசுவாள், உடை உடுத்துவாள்.
சில சமயம் மற்றவர் பார்வை, பேச்சு அவளுக்கு கொஞ்சம் மன வருத்தத்தை ஏற்படுத் தியது. ஆனால், அதை எல்லாம் கண்டு மனம் வருந்த மாட்டாள்.
அவளுக்குள் மற்றவர் போல தானும் மாடர்னாக இருக்க வேண்டும் என நிறைய ஆசைகள், கனவுகள் இருந்தன. ஆனால், ஒரு நாள் அதுவே எங்கள் இல்லற பந்தத் திற்குள் புயல் காற்றாக வீசும் என்று நான் கருத வில்லை.
குடும்பத்திற்கு ஏற்றவள்
என்ன தான் பார்ப்பவர்கள் பட்டிக்காடு என்று அழைத்தாலும், அவள் எங்கள் குடும்பத்தை மிகவும் ஆரோக்கிய மாக வைத்துக் கொண்டாள்.
நான் திருமண த்திற்கு முன் பெரும்பாலும், மதிய, இரவு உணவு வெளியே தான் சாப்பிட்டுக் கொண்டி ருந்தேன். அதை மாற்றி மூன்று வேளையும் வீட்டு உணவு சாப்பிட வைத்தாள்.
குணங்கள்!
எங்கள் பிள்ளைகள் என்றி ல்லாமல், அக்கம் பக்கத்து வீட்டு பிள்ளை களுக்கும் விளையாட்டு காண்பித்து அனைவ ருக்கும் ஒன்றாக சோறூட்டி மகிழும் அளவிற்கு மிகவும் நல்ல குணங்கள் கொண்டி ருந்தாள்.
மாமியாரை தாய் போல கவனித்துக் கொள்வாள். சொந்த மகளே செய்ய தயங்கும் சில வேலைகளை கூட அருவருப்பு இன்றி நோய் வாய்ப் பட்டிருந்த என் தாய்க்கு அவள் செய்து வந்தாள்.
ஆரம்பம்!
இப்படியாக எங்கள் திருமண வாழ்க்கை நன்கு பயணித்துக் கொண்டி ருந்தது. அப்போது ஏறத்தாழ 11 ஆண்டுகாலம் பயணித் திருந்தது எங்கள் இல்லற பந்தம்.
அந்த புதுவரவு எங்கள் இல்வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்று ஆரம்பத்தில் நான் கருதவில்லை.
எங்கள் எதிர்த்த வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதி தங்கள் மகன், மருமகளுடன் அமெரிக்கா சென்று செட்டிலாக போவதாக கூறி அவர்களது வீட்டை ஒரு எக்ஸ் எம்.எல்.ஏ மகனுக்கு விற்று விட்டு சென்றனர்.
வந்த உடன்
வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே நான் தலைவ ருக்கு மிகவும் நெருக்கம், எந்த பிரச்சனை யாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்க, எனக்கு எல்லாரையும் தெரியும் என்ற பாவ்லாவுடன் சுற்றி வந்தான்.
அதுவரை எங்கள் ஏரியாவில் கவுன்சிலர் கூட அப்படி கெத்து காண்பித்து உலா வந்தது இல்லை. ஆனால், அவனோ செய்வது எல்லாம் பில்டப்பாக தான் இருந்தது.
மனைவி
அவன் மட்டுமல்ல, அவனது மனைவியும் அப்படி தான். வந்தவுடனேயே பெண்கள் சுய உதவி குழு தலைவியாக மாறினாள்,
கேட்டாள் நான் தலைவியாக இருந்தால், நிறைய உதவிகள் உடனடியாக கிடைக்கும் என்று காரணம் கூறினார்.
இப்படியாக கணவன், மனைவி இருவரும் எங்கள் ஏரியாவில் தேர்ந்தெடுக்கப் படாத தலைவன், தலைவியாக மாறினார்கள்.
கூத்து!
எக்ஸ் எம்.எல்.ஏ மகனை கூட ஒரு கட்டத் திற்குள் அடக்கி விடலாம். ஆனால், அவனது மனைவியை அப்படி அடக்க முடிய வில்லை. தனது ஆடம்பரம், வீண் பகட்டு குணங்களை சுய உதவி குழுக்குள் திணிக்க ஆரம்பித்தாள்.
அதற்கு ஆதர வளிக்கும் நபர்களை தன்னுடன் நெருக்கமாக வைத்துக் கொள்வாள், எதிர்ப்பு காண்பித்தால் உதவிகள் அவர்களுக்கு பெரிதும் கிடைக்காது.
சிக்கிக் கொண்டாள்!
சுய உதவி குழுவை தாண்டி, என் மனைவி உட்பட ஒருசிலர் அவளுடன் மிகவும் நெருக்கமான தோழமை உருவாக்கிக் கொண்டனர்.
ஆடம்பரம், வீண் பகட்டு, வெட்டி பந்தா இவர்களுக்கும் பரவ துவங்கியது. இந்த தாக்கத்தால், ஒரு வருடம் கழித்து என் மனைவியை பார்த்தவர் களுக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்தது.
மேக்கப், அலங்காரம், அசத்தலான புடவைகள் என சாதாரண நாட்களிலும் ஏதோ விழாவுக்கு போவது போல தான் தோற்ற மளிப்பாள் என் மனைவி.
மாற்றம்!
ஒரே வருடத்தில் என் மனைவியிடம் நான் அப்படியான மாற்றத்தை உணர வில்லை. கொஞ்சம், கொஞ்சமாக என் மனைவியின் குணங்கள் மாறத் துவங்கின.
வீண் ஆடம்பரம், தேர்தலின் போது கட்சி அலுவலங் களுக்கு செல்வது என போக்கு திசை மாறியது.
ஒரு கட்டத்தில் கட்சி வேலை, அது இது என தேவையில்லாத ஆண்களுடன் பேசுதல், பழகுதல் உண்டானது. அதுவரை பொறுமை யாக இருந்த என்னால், இதை பொறுத்துக் கொள்ள முடிய வில்லை.
அம்மா மரணம்!
எங்களுக்குள் சண்டை வலுக்க துவங்கியது. எங்கள் சண்டை பிள்ளை களின் படிப்பை பாதிக்க துவங்கியது. நிம்மதியாக இருந்த எங்கள் உறவு, கொஞ்சம், கொஞ்சமாக மோசமடைய துவங்கியது.
எதிர் பாராத விதமாக எனது அம்மா ஒரு நாள் காலமானார். கிட்டத்தட்ட நாலைந்து மாதங்களுக்கு பிறகு எங்கள் வீட்டில் கொஞ்சம் அமைதி நிலவியது அந்த தருணத்தில் தான்.
அதுவரை நாள் தவறாமல் எங்களுக்கு சண்டை வந்துக் கொண்டே இருந்தது.
அடி மேல் அடி
அம்மாவின் மரணத்திற்கு வந்தவர்கள், அவரது மரணத்திற்கு ஒரு வகையில் என் மனைவியும் காரணம் என காதுப்பட பேசினார்கள். ஒரு மகள் போல கவனித்து வந்தவள்,
கடந்த ஒன்றைரை ஆண்டு களாக அவர் மீது சரியாக அக்கறை செலுத்த வில்லை. அப்படி அக்கறையாக இருந்திருந்தால், அவர் உயிருடன் இருந்திருப்பார் என்றார்கள். இந்த பேச்சில் எனக்கு உடன் பாடில்லை,
அவர் ஏற்கனவே உடல் நலம் மோசமாக தான் இருந்தார். அவரது மரணம் எழுதப்பட்ட ஒன்று. ஊரார் பேச்சு கேட்டு கலங்கிய மனைவிக்கு நான் தான் ஆறுதல் கூறினேன்.
புகார்கள்!
தொடர்ந்து மகளீர் சுய குழுவில் இருந்து பல புகார்கள் வந்தன. எக்ஸ். எம்.எல்.ஏ- வின் மருமகளை நீக்கினார்கள். உடன் அவளுக்கு ஆதரவாக இருந்தவர் களையும் நீக்கினார்கள். பத்து வருடங் களுக்கும் மேல் உற்றார்,
உறவினர் போல பழகிய அக்கம், பக்கத்து வீட்டார் என் மனைவி யுடன் பகைமை வெளிப்படுத்தி னார்கள். தண்ணீர் பிடிப்பதில் இருந்து, காய்கறி வாங்குவது வரை ஒதுக்க ஆரம்பித் தனர்.
பள்ளி ஆசிரியை!
ஒரு நாள் குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளிக்கு சென்ற போதுதான்... எங்கள் குழந்தையின் பள்ளி ஆசிரியை ஒருவர்...
என் மனைவியிடம், உங்கள் வீட்டில் ஏதாவது பிரச்சனையா, எதுவாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அவர்கள் வகுப்பில் கூறி வருந்தும் அளவிற்கு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுரைக் கூறினார்கள்.
திருந்தினாள்!
கிட்டத்தட்ட அடுத்தடுத்து நடந்த சில நிகழ்வுகள் என் மனைவி சென்ற பாதை தவறு என்பதை உணர்த்தியது. மீண்டும் என் மனைவியாக மாற துவங்கினாள். வீட்டின் மீது அதிக கவனம் செலுத்தினாள்.
அந்த ஆடம்பர நட்பை, கட்சி வேலைகளை தவிர்த்தால். ஆயினும், கூட பத்து வருடங்களில் சம்பாதித்த நற்பெயர் இழந்ததை எங்கள் அக்கம்,
பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்களிடம் இருந்து அவளால் மீண்டும் பெற இயல வில்லை. நிறைய நாட்கள் என்னிடம் இரவில் குழந்தைகள் உறங்கிய பிறகு அழுது புலம்பி இருக்கிறாள்.
தவறுகள்
சில வருடங்கள் கடந்தன... கொஞ்சம், கொஞ்சமாக மீண்டும் பழைய நட்புகளை சம்பாதித்துக் கொண்டாள். தவறுகள் இயற்கை.
ஆனால், அதை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல், நாம் எவ்வளவு நல்லவராக வாழ்ந்தி ருந்தாலும், பெயர் சீரழிந்து விடும்.
என் வாழ்வில் இது நடந்து பல வருடங்கள் ஆகி விட்டது. இப்போது என் பிள்ளைகள் திருமண வயதை எட்டி விட்டனர்.
ஆனால், இந்த காலத்தில் இது போன்ற தவறுகள் தொடர்ந்து நடந்துக் கொண்டே தான் இருக்கிறது. அதுவும் அதிகளவில்.
நம்பிக்கை!
நமக்கு தேவை என்ன, நாம் யார், நமது சூழல், கலாச்சாரம், கடமைகள் என்ன என்பதை மறந்து... யாரோ ஒருவர் செய்கிறார் எனது நமது இயல்பை நாம் மாற்றிக் கொள்ளும் போதெல்லாம் தவறான பாதையில் பயணிக்க தூண்டப் படுகிறோம்.
அதிலும், இன்றைய சமூக தள வாழ்வில்... சோஷியலாக இருக்கிறோம் என்ற பெயரில் தங்கள் அந்தரகத்தை நால்வர் அறிய செய்வது எல்லாம் தகுமா?
என் வாழ்க்கை, என் அனுபவம் நிச்சயம் சிலருக்கு பாடமாக அமையும், அவர்கள் பெரிதாக பாதிப்பு அடையாமல் நல்ல மாற்றம் காண்பார்கள் என்று நம்புகிறேன்.
Thanks for Your Comments