தாய்ப்பால் கொடுக்கும் படத்தை வெளியிட்ட மாடல் ஜீலு | The model Jelu released by the breast feeding film !

0
கேரளாவைச் சேர்ந்த ஜீலு ஜோசப் என்ற மாடல், மாத இதழ் ஒன்றின் அட்டைப் படத்திற்கு தாய்ப்பால் கொடுப்பது போல் போஸ் கொடுத் துள்ளார்.

இதற்கு சமூக வலைத் தளங்களில் பெரும் பாலானோர் ஆதரவு தெரிவித்து வரு கின்றனர்.

கேரளாவில் மாதம் இருமுறை வெளியாகும் கிரிஹலட்சுமி என்ற இதழ், பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பது தவறான கண்ணோட்ட த்தில் பார்க்கப் படுவதை மாற்ற விரும்பியது. 

இதற்காக, கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளரும் மாடலுமான ஜீலு ஜோசப் என்பவரை அணுகி, தாய்ப்பால் கொடுப்பது போல் போஸ் கொடுக்கு மாறு கேட்டுள்ளது. 

அந்த நோக்க த்தின் தன்மையை உணர்ந்த ஜீலு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக் காமல் அதற்கு சம்மதித் துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவர் தாய்ப்பால் கொடுப்பது இம்மாத இதழில் அட்டைப் படமாக வெளியிடப் பட்டுள்ளது. 

ஆரம்ப த்தில் இதைப் பார்த்து பலரும் அதிரிச்சி யடைந்தாலும், அதன் நோக்கத்தை உணர்ந்தபின் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலை யில், தாய்ப்பால் கொடுப்பது போல் போஸ் கொடுத்தது பற்றி தெரிவித்த ஜீலு ஜோசப், 

தனது கன்னியாஸ்திரி சகோதரியும் தனது தாயும் இதற்கு எதிர்ப்பு தெரிவித் தாகவும், தனக்கு சரி என்று தோன்றியதால் இதை செய்த தாகவும் தெரிவித் துள்ளார்.

மேலும், தாய்ப்பால் கொடுப்பது என்பது பெண் களுக்கு கிடைத்துள்ள வரம், இதைத் தப்பான கண்ணோட்ட த்தில் பார்ப் பவர்கள் மீதுதான் தவறு உள்ளது எனவும், 
அதை மறைத்துக் கொண்டு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி யுள்ளார்.

இதே போல், தாய்ப்பால் கொடுப்பதை ஆதரித்து ஆஸ்திரேலிய பெண் எம்.பி ஒருவர் பாராளுமன்ற த்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சம்பவம் அனைவரது கவன த்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings