கமல் ரஜினி அறிவித்த நிதி இன்னும் வரவில்லை - கும்பகோணம் பெற்றோர் !

0
ஒட்டு மொத்த இந்தியாவை யும் பதை பதைக்க வைத்த கும்பகோணம் தீ விபத்து இன்னும் நம் மனத்தில் ஆறாத ரணமாகவே இருக்கிறது. 

கமல் ரஜினி அறிவித்த நிதி இன்னும் வரவில்லை - கும்பகோணம் பெற்றோர் !
2004-ல், கும்பகோணம் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல்கருகி உயிரிழந்தனர். 

அவர்களின் பெற்றோர் களுக்கு ஆறுதல் சொல்வ தற்காக அப்துல் கலாம், சோனியா காந்தி, கருணாநிதி, ஜெயலலிதா உள்பட பல அரசியல் தலைவர்கள் கும்பகோணத்துக்கு ஓடோடி வந்தனர்.

குழந்தை களை இழந்து தவித்த பெற்றோருக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியது 

அன்றைய ஜெயலலிதா அரசு. கமல், ரஜினி உள்ளிட்ட திரைப்பட நடிகர் களும் லட்சக் கணக்கில் நிவாரண நிதியை அறிவித்தனர். 

அரசு அறிவித்த நிவாரண நிதி உடனடி யாகப் போய்ச் சேர்ந்தது. ஆனால், நடிகர்கள் அறிவித்த நிதி 14 ஆண்டுகள் கடந்தும் கூட, பாதிக்கப் பட்டோரை இன்னும் சென்றடைய வில்லை.

குழந்தை களைப் பறி கொடுத்த பெற்றோர்கள் சங்கத்தின் செயலாளர் இன்பராஜைச் சந்தித்தோம். 
‘‘எங்கள் குழந்தை களின் இறப்புக்குக் காரண மான பள்ளியின் தாளாளர் பழனிச் சாமிக்கு ஆயுள் தண்டனை, 

கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட் டோருக்குத் தலா ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப் பட்டது. 

எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், அது எங்கள் குழந்தை களுக்கு ஈடாகாது. இருந்தாலும், சட்டப் போராட்டம் நடத்தினோம். 

ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைந்த விசாரணை கமிஷன், ‘குழந்தை களை இழந்த ஒவ்வொரு வருக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்’ என உத்தர விட்டது. 

தமிழக அரசோ, முதலில் வழங்கிய ஒரு லட்சத்து க்கு வட்டி போட்டுக் கணக்கு பார்த்து, ரூ.2 லட்சத்தைக் கழித்துக் கொண்டு, மீதி ரூ.8 லட்சம் மட்டுமே வழங்கியது. 

நடிகர்கள் கமல்ஹாசன் ரூ.12 லட்சம், ரஜினிகாந்த் ரூ.2 லட்சம், விவேக் ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்குவ தாக அறிவித்தனர்.
எங்களுக்கு ஆறுதல் கூற வந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அப்போதைய பொதுச் செயலாளர் சரத்குமார், ‘எங்கள் சங்கம் சார்பில் ரூ.60 லட்சம் வசூலா கியுள்ளது. 

ஒரு கோடி ரூபாய் வசூலானதும், பாதிக்கப் பட்ட பெற்றோரு க்குத் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப் படும்’ என அறிவித்தார். ஆனால், இன்று வரை நடிகர் சங்கத்தி லிருந்து உதவி எதுவும் வந்து சேர வில்லை. 

சரத்குமாரைச் சந்திக்கப் பலமுறை சென்றோம். அவரைச் சந்திக்கவே முடிய வில்லை. புதிதாகப் பொறுப்புக்கு வந்த நடிகர் விஷாலு க்குக் கடிதம் எழுதினோம். 

பதில் வரவில்லை. ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த நடிகர் விஜயகாந்த் மட்டுமே நேரில் வந்து அந்தத் தொகையை அனைவரு க்கும் பிரித்துக் கொடுத்து ஆறுதல் சொன்னார். 

ஆனால், எங்கள் குழந்தை களின் பெயரில் நடிகர் சங்கம் வசூல் செய்த பணம் என்ன ஆனது என்றே தெரிய வில்லை. எங்கள் குழந்தைகளுக் காக என வசூலித்து, அவர்களே வைத்துக்கொள்வது எந்த வகையில் நியாயம்?

என்னுடைய இரு மகன் களைத் தீ விபத்தில் இழந்து விட்டேன். அதன் வலி முன்பை விட இப்போது அதிகமாக உள்ளது. கல்லூரி க்குச் செல்லும் 

மாணவர் களைப் பார்க்கும் போது, ‘நம்ம புள்ளைங்க இருந்திருந்தா, இந்த வயசுல இப்படித் தானே இருந்திருப் பாங்க’ என மனது ஏங்குகிறது. 
இதுபோன்ற துயரம் வேறு யாருக்கும் வரக் கூடாது என்பதற்காகத் தான், ஒவ்வோர் ஆண்டும் நினைவு தினத்தில் எல்லோரும் சேர்ந்து 

அஞ்சலி செலுத்து கிறோம். அந்த நாளை, குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்து கிறோம்’’ என்றார்.

நடிகர் சரத்குமாரிடம் இது பற்றி விளக்கம் கேட்டோம். ‘‘நான் கும்பகோணம் சென்று அப்படிப் பேசியது உண்மை தான். 

இல்லை யென்று சொல்ல வில்லை. ஆனால், அது தொடர்பான இன்றைய நிலைமை மற்றும் கணக்கு வழக்கு விவரம் முழுமை யாகத் தெரிய வேண்டு மென்றால், 

இப்போது நடிகர் சங்கப் பொறுப்பில் இருப்பவர் களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். எல்லா விவரங் களும் அவர்களு க்குத் தெரியும்’’ என்று முடித்துக் கொண்டார் சரத்குமார்.

இப்போது நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் பொன் வண்ணனிடம் பேசினோம். ‘‘கும்பகோணம் தீ விபத்தில் குழந்தை களைப் 
பலி கொடுத்த குடும்பங் களுக்கு உதவி செய்வதற் காக, சில முன்னணி நடிகர்கள் பணம் தந்ததாக முந்தைய நிர்வாகம் சொல்லி யிருக்கலாம். 

ஆனால், சங்கத்தில் நாங்கள் பொறுப்புக்கு வந்த சமயத்தில், ‘அப்படிச் சொன்ன வர்கள் சிலரிட மிருந்து பணம் எதுவும் வரவில்லை’ எ

ன்ற தகவலும் எங்களுக்கு வந்தது. ‘மொத்தத் தொகையையும் வசூல் செய்து விட்டு, அதைச் சங்கம் வைத்துக் கொள்ளவோ, செலவு செய்யவோ இல்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்’’ என்றார்.

கமல், ரஜினி போன்றவர்கள் சொன்னபடி நிதியைக் கொடுக்க வில்லையா? அதை யெல்லாம் நடிகர் சங்கம் வசூலித்து வைத்துக் கொண்டதா? விளக்கம் சொல்ல வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது.

- மு.இராகவன், ம.அய்யனார் ராஜன்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings