சென்னை: தாயின் கள்ளக் காதலை தந்தையிடம் போட்டுக் கொடுத்த 9 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
சென்னை நெசப் பாக்கத்தை அடுத்த எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா.
இந்த தம்பதியின் 9 வயது மகன் ரித்திஷ் சாய். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
தாய் பொறியாளர்
மஞ்சுளா மின்வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகின்றார். பள்ளி முடிந்ததும் சிறுவனை தாய் அல்லது தந்தை அழைத்து வருவது வழக்கம்.
நாகராஜ் என்பவருடன் தொடர்பு
அப்படி இருக்கை யில் தாய் மஞ்சுளா விற்கு அப்பகுதியில் உள்ள பாரதி நகரைச் சேர்ந்த நாகராஜ் என்பவருடன் தொடர்பு ஏற்பட் டுள்ளது.
இதனால் நாகராஜும் ரித்திஷை அவ்வப்போது அழைத்து வந்துள்ளார்.
சிறுவன் கடத்தல்
இந்நிலை யில் நேற்று மாலை பள்ளி முடிந்து பயிற்சி வகுப்புக்கு சென்ற சிறுவனை நாகராஜ் கடத்தி சென்றுள்ளார்.
பின்னர் இரும்புக் கம்பியால் அடித்து சிறுவனை கொலை செய்துள்ளார்.
பிரேதபரிசோதனை
சிறுவன் மாயமான புகாரை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சிறுவனை கொலை செய்த நாகராஜை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
கொலை ஒப்புதல்
அதில் சிறுவன் ரித்திஷை கொலை செய்ததை ஒப்புக் கொண்ட நாகராஜ் அதற்கான காரணத்தை யும் தெரிவித் துள்ளார்.
அதாவது மஞ்சுளா விற்கும் தனக்கும் உள்ள தொடர்பை ரித்திஷ், தனது தந்தையான கார்த்திகேய னிடம் கூறி யுள்ளார்.
நாகராஜ் மீது புகார்
இதனால் அதிர்ச்சி யடைந்த கார்த்திகேயன், நாகராஜை எச்சரித் ததோடு அவர் மீது சில மாதங் களுக்கு முன்பு போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதனால் ஆத்திர மடைந்த நாகராஜ் சிறுவனை பழிவாங்க கொலை செய்ததாக தெரிவித் துள்ளார்.
மஞ்சுளா விற்கு தொடர்பு?
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ரித்திஷ் கொலையில் தாய் மஞ்சுளா விற்கும் தொடர் புள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயின் கள்ளக் காதலால் 9 வயது சிறுவன் கொல்லப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது
Thanks for Your Comments