புதுச்சேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங் களில் 18 ஆயி ரம் பேர் கரும்பு விவசாயிகள்.
தனியார் ஆலை மூடல், நஷ்டத்தால் இயங்காத கூட்டுறவு ஆலைகள் போன்ற காரணங்க ளால் புதுச்சேரி கரும்புகள் மொத்தமும் தமிழக ஆலை களுக்குச் செல்கின்றன.
ஆனால், புதுச்சேரி புராண சிங்கு பாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், கரும்பை இயற்கை முறை யில் விளைவித்து, அதை நாட்டு சர்க்கரை யாக உற்பத்தி செய்கிறார்.
புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு இயற்கை நாட்டு சர்க்கரை உற்பத்தி கூடம் இவருடையதுதான்.
ரவிச்சந்திரன் நம்மிடம் கூறும் போது "எங்கள் குடும்பம் முதலில் உரம், பூச்சிக் கொல்லி மருந்தை தான் பயன் படுத்தி விவசாயம் செய்தது.
ஒரு கட்டத்தில் மகசூல் குறைந்தது. 2000-ம் ஆண்டு முதல் இயற்கை விவசாயத் துக்கு மாறினோம். ரசாயன கலப்பு இல்லாமல் கரும்பு உற்பத்தி செய்யத் தொடங் கினோம்.
மகசூல் கூடியது.
கரும்பு அறுவடை க்குப் பின்னர் ரசாயன கலப்பு இல்லாத நஞ்சில்லா நாட்டு சர்க்கரையை உற்பத்தி செய்யத் தொடங்கினோம்.
இதற்காக உற்பத்திக் கூடம் அமைத்து சுத்தமான முறையில் சர்க்கரை உற்பத்தி யானது.
இதன் சுவை பிடித்துப்போக ஆரோக்கி யமான சர்க்கரைக்கு மக்களின் ஆதரவளிக் கின்றனர்” என்கிறார் உற்சாகத்துடன்.
புதுச்சேரி மட்டுமில்லாமல் சென்னை, பெங்களூர், திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங் களுக்கு இந்த இயற்கை சர்க்கரைக்கு வரவேற்பு கிடைத்தது.
இந்த வெற்றி யின் ரகசியம் அறிய விவசாயிகள் பலர் ரவிசந்திரனை தேடி வருகின்றனர். தான் பெற்ற அனுபவத்தை அவர்களுக் கும் கூறுகிறார்.
மேலும் அவர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கிறார். இதன் மூலம் அனைவரும் இயற்கை விவசாய த்துக்கு திரும்ப வேண்டும்.
மண்ணும் உண வும் நஞ்சாவதை தடுக்க வேண்டும் என்பது தான் இவரின் விருப்பம்.
இயற்கைக்கு இருக்கும் மவுசு எப்போதும் குறையாது என்பதை தன் உழைப் பால் உணர்த்தி இருக் கிறார் விவசாயி ரவிச்சந்திரன்.
Thanks for Your Comments