பிங்க் வழித்தடம் எனப்படும் மெட்ரோ பேஸ் 3 திட்டத்தின், பணிகள் நிறை வடைந்த மஜ்லிஸ் பூங்கா மற்றும் துர்காபாய் தேஷ்முக் தெற்கு வளாகம் இடைப் பட்ட பகுதிக்கான ரயில் சேவை நேற்று துவங்கியது.
மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் புரி, மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கொடி யசைத்து வைத்து சேவையை பயணி களுக்கு தொடங்கி வைத்தனர்.
மெட்ரோ பேஸ்3 திட்டத்தில் ஒரு பகுதியாக மஜ்லிஸ் பார்க் மற்றும் ஷிவ் விகார் காரிடார் வரை யிலான 59 கி.மீ நீளத்திற்கு ரயில் பாதை அமைக்கும் பணி சில ஆண்டு களுக்கு முன் துவங்கியது.
பிங்க் லைன் 7 எனும் இந்த திட்டத்தில் முதல் கட்டமாக, மஜ்லிஸ் பார்க் தொடங்கி டெல்லி பல்கலைக் கழகத்தின்
தெற்கு வளாகம் வரை யிலான 21.56 கி.மீ தொலைவுக்கு பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று பிப்ரவரி மாத தொடக்கத்தில் நிறை வுற்றது.
அதைத் தொடர்ந்து தண்டவாளம் அமைக்கப்பட்ட பகுதி, புதிய ரயில்கள் மற்றும் தானியங்கி சிக்னல் உள்பட பாதுகாப்பு அம்சங்கள் குறித்த
அனைத்து சோதனை களையும் பிப்ரவரி 26, 27 மற்றும் 28 தேதிகளில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனர் தலைமை யிலான குழுவினர் மேற்கொண்டனர்.
அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் திருப்தி அளித்ததை அடுத்து, பயணிகள் சேவை தொடங்கலாம் என கமிஷனர் சான்று அளித்தார்.
அதையடுத்து பிங்க் வழித் தடத்தில் மஜ்லிஸ் பார்க் தொடங்கி துர்காபாய் தேஷ்முக தெற்கு வளாகம் இடைப்பட்ட மெட்ரோ ரயில் சேவை 14ம் தேதி துவங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் உறுதியான தகவலை சில தினங்களுக்கு முன் அறிவித்தது.
அறிவித்தபடி, புதன்கிழமை (நேற்று) மாலை 4.00 மணிக்கு மெட்ரோ பவனில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், பிங்க் வழித் தடத்தின் பகுதி சேவையை
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் ஹர்திப் சிங் புரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பயணிகளுக் கான முதல் சேவை இரு முனை களில் இருந்தும் மாலை 6.00 மணிக்கு எதிரும், புதிருமாக துவங்கியது.
புதிய வழித் தடத்தின் மூலம் பயணிப்ப தால், டெல்லி பல்கலைக் கழக மாணவ ர்களின் பயண நேரம் பெருமளவு குறைகிறது என்பது இந்த சேவையின் சிறப்பான அம்சமாகும்.
முன்னதாக, வடக்கு வளாகத்தில் இருந்து தெற்க் வளாகம் செல்லும் மாணவர்கள், சாலை வழியாக பல மணி நேரம் பயணித்தோ அல்லது ஏர்போர்ட் லைன் மெட்ரோவில் தவ்லா கான் வரை பயணித்து அதன் பின் பஸ் பிடித்தும் சென்றனர்.
ஆனால் இப்போது மஜ்லிஸ் பார்க்கில் இருந்து தெற்கு வளாகத்தை 34 நிமிடங் களில் மாணவர் களால் சென்றடையு முடியும் இந்த சேவைக்கு கட்டணம் ₹40 என நிர்ணயம் செய்துள்ளது.
சிறப்புகள் என்ன?
பிங்க் லைன் அறிமுகம் ஆன பின், மெட்ரோவின் சேவை 252 கி.மீராக விரிவாகி உள்ளது. புதிய பாதையில், மஜ்லிஸ் பார்க், ஆசாத்பூர், ஷாலிமார் பாக், நேதாஜி சுபாஷ் பிளேஸ், ஷாகுர்புர், பஞ்சாபி பாக் மேற்கு,
இஎஸ்ஐ மருத்துவ மனை, ரஜோரி கார்டன், மாயாபுரி, நரைனா விகார், டெல்லி கண்டோன்மெண்ட், துர்காபாய் தேஷ்முக் சவுத் கேம்பஸ் என மொத்தம் 12 ஸ்டேஷன் கள் உள்ளது.
சர்ச்சைக்கு வித்திடாத விழா
மெட்ரோ தொடர்புடைய திறப்பு விழாக் களில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீப காலமாக தவிர்க்கப் பட்டு வந்தார்.
முன்னதாக கடந்தாண்டு டிசம்பர் 25ல் நொய்டா - கல்காஜி வழித் தடத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கிய போது, கெஜ்ரிவால் அழைக்கப் படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒருவாறு பிரச்னையை மெட்ரோ சமாளித்துக் கொண்டது. இப்போது, பிங்க் லைன் வழித்தடத்தை அது போல குறைகள் இல்லாத படி,
மத்திய அமைச்சரும், முதல்வர் கெஜ்ரிவாலும் இணைந்து கொடியசைத்து துவக்கி இருப்பது ஆச்சர்யம் ஏற்படுத்தி உள்ளது.
Thanks for Your Comments