முன்னாள் பிரதமரும், தனது தந்தை ராஜீவ் காந்தி கொலை யாளிகளை நாங்கள் மன்னித்து விட்டோம் என ராகுல் காந்தி பேசியிருப்பது மனித நேயமானது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித் துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ள ராகுல் காந்தி, இன்று சிங்கப்பூரில் முன்னாள் ஐஐஎம் மாணவர் களுடன் கலந்துரை யாடினார்.
அப்போது தனது தந்தை ராஜீவ் கொலை யாளிகளை நாங்கள் மன்னித்து விட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித் திருந்தார்.
இந்நிலையில், இன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ள நடிகர் கமல்ஹாசன், மொடக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்து
தொண்டர் களிடையே பேசுகை யில், அரசு செய்ய வேண்டிய செயல்களை, செய்யாத காரணத் தினாலேயே தாங்கள் அரசியலுக்கு வந்திருப்பதாக கூறினார்.
மொடக் குறிச்சியில் இருந்து, ஈரோடு பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியாரின் பூர்வீக இல்லத்துக்குச் சென்ற கமல்ஹாசன், அங்கிருந்த பெரியார் பயன்படுத்தி பொருட்கள் மற்றும் ஓவியங்களை பார்வை யிட்டார்.
பின்னர் அங்கிருந்த விருந்தினர் குறிப்பேட்டில், என் சிந்தனை வளர்ந்த வீடு இது, அவர் சிந்தனை இங்கே வளர்ந்த காரணத் தினால்" அன்புடன் கமல்ஹாசன் என எழுதி கையெழு த்திட்டார்.
பின்னர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், மாற்றம் வேண்டும் என மக்கள் எதிர் பார்ப்பதாகவும், அதே எதிர்பார்ப்பு தமக்கும் இருப்பதாக தெரிவித்தார். தமிழக அமைச்சர்கள் குறித்து தாம் நேர்மையாக விமர்சிப்ப தாகவும்,
ஆனால், நேர்மை யில்லா விட்டாலும், தன்னை விமர்சிக்க அமைச்சர் களுக்கு கடமையாக இருப்ப தாகவும் அவர் கூறினார்.
ராஜீவ் காந்தி கொலையா ளிகளை நாங்கள் மன்னித்து விட்டோம் என ராகுல் காந்தி பேசி யிருப்பது மனித நேயமானது என்றும் 7 பேர் விடுதலை தொடர்பாக நாம் கேட்பது சட்டத்தின் தளர்வு என்று கூறினார்.
மேலும், காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத் தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்திய கமல்ஹாசன்,
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறை வேற்ற மூன்றாவது தலை முறையாக கேட்டு வந்தாலும், இது வரை நிறைவேற்றப் படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
Thanks for Your Comments